41-வது சென்னை புத்தகக் காட்சி, அரங்கு எண் 201. இடம் : செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ - இண்டியன் மேல்நிலைப்பள்ளி வளாகம், பச்சையப்பன் கல்லூரி எதிரில், சென்னை-29. வாசிப்பை நேசிப்போம் !!! தமிழுடன் வளர்வோம் !!!

கான் - காடுகளில் கற்றவை

ஆசிரியர்: ம.செந்தமிழன்

Category கட்டுரைகள்
Publication செம்மை வெளியீட்டகம்
Book FormatPaperback
Pages 96
First EditionMay 2017
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
$4      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

"..இந்த உரையாடல் வழியாக நான் நிகழ்த்த விரும்பும் மாற்றம் ஒன்றே ஒன்றுதான். மனிதர்களை மீண்டும் காடுகளுக்கு அனுப்ப வேண்டும்! இதுதான் என் விருப்பம். உங்களைக் காட்டுக்குள் அனுப்பிவிடத் துடிக்கிறேன். நீங்கள் வாழுமிடங்களில் எல்லாம் காடுகளை வளர்த்தெடுக்க நினைக்கிறேன். மனிதர்களும் விலங்குகள்தான் என்பதால், இந்த விலங்குகளைக் காடுகளுக்குள் அனுப்பிவிட முற்படுவதுதான் என் நோக்கம். நவீனச் சிந்தனை இந்த நோக்கத்தை 'மூடத்தனம்' எனத் தீர்ப்பிடுகிறது. எனக்கு அதைப் பற்றிக் கவலையோ அக்கறையோ இருப்பதில்லை. ஏனெனில், இந்த நவீனத்தைவிட எனக்கு வயது அதிகம். காடுகளும் நானும் ஒன்றுதான் என்பதால், மனிதர்களைக் காட்டிலும் எனக்கு ஆயுள் நீளம். எனது உடலின் ஆயுளை வரையறுக்கலாம். எனது உயிரின் இருத்தலையும், நீட்சியையும் அதன் பயணத்தையும் எவரும் அளக்கவியலாது. ஆகவே என்னை நோக்கி வீசப்படும் கருத்துகளை ஒரு சிறு துகளாகவும் நான் மதிப்பதில்லை."


உங்கள் கருத்துக்களை பகிர :