41-வது சென்னை புத்தகக் காட்சி, அரங்கு எண் 201. இடம் : செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ - இண்டியன் மேல்நிலைப்பள்ளி வளாகம், பச்சையப்பன் கல்லூரி எதிரில், சென்னை-29. வாசிப்பை நேசிப்போம் !!! தமிழுடன் வளர்வோம் !!!

ரோலக்ஸ் வாட்ச்

ஆசிரியர்: சரவணன் சந்திரன்

Category நாவல்கள்
Publication கிழக்கு பதிப்பகம்
Book FormatPaper back
Pages 168
First EditionDec 2017
ISBN978-81-8493-837-1
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$7       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்திய இளைய தலைமுறையினரை மூன்று பெரும் தலைமுறைகளாகப் பிரிக்கலாம். சுதந்திரத்திலிருந்து 70கள் வரை இலட்சியவாதத்தின் காலம். 70களிலிருந்து 90கள் வரை இலட்சியவாதங்கள் முறிந்து நிராசையும் தனிமையும் அன்னியமாதலும் நிரம்பிய காலம், அதுவே பல்வேறு அரசியல் எதிர்ப்பியன்க்கங்கள் எழுந்த காலமும்கூட. 70களுக்குப் பிறகு துவங்கி இப்போதுவரை தொடரும் காலத்தின் இளைஞர்கள் உலகம் என்ன என்ற கேள்விக்கு விடை தேடுகிறது சரவணன் சந்திரனின் இந்த நாவல்.
உலகமயமாதல் சூழலில் தனது இடம், அடையாளம் குறித்து எந்த பிடிமானமும் இல்லாத இளைஞர்களின் அந்தரங்க உலகம், அவர்களது மனித உறவுகள், சமூக உறவுகள் ஆகியவை தண்ணீரில் விழும் பிம்பங்களைப் போல கலகங்களாகவும் தெளிவற்றவையாகவும் இருக்கின்றன. அவநம்பிக்கைக்கும் நம்பிக்கைக்கும் அப்பாற்பட்ட ஒரு புதிய காலத்தில் சஞ்சரிக்கும் இந்த நிழல்களுக்கிடையிலான உரையாடல்களும் போராட்டங்களும்தான் நம் காலத்தின் மொழியாக இருக்கின்றன. அந்த மொழியின்வழியே எழுதப்பட்ட ஒரு சமகால தமிழ் வாழ்க்கையின் கதைதான் ரோலக்ஸ் வாட்ச்.


உங்கள் கருத்துக்களை பகிர :