ஃபிடல் காஸ்ட்ரோ : சிம்ம சொப்பனம்

ஆசிரியர்: மருதன்

Category வாழ்க்கை வரலாறு
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaperback
Pages 208
ISBN978-81-8368-124-7
Weight250 grams
₹225.00 ₹213.75    You Save ₹11
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



புரட்சி என்ற சொல் கொச்சைப்படுத்தப்பட்டுவிட்ட காலத்தில், ஃபிடல் காஸ்ட்ரோவின் துடிப்பும் ஆவேசமும் விடுதலை வேட்கையும் நிறைந்த வாழ்க்கை, அதன் அர்த்தத்தை மீட்டுத் தருகிறது. க்யூபா என்ற தேசத்தின் பெயர் நமக்குப் பரிச்சயமாக இருப்பதற்குக் காரணம், ஃபிடல் காஸ்ட்ரோ . அவர் இல்லாது போயிருந்தால் அத்தேசம் அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாகியிருக்கும். சின்னஞ்சிறு தீவொன்றில் இருந்து உலகம் முழுவதிலும் செல்வாக்குமிக்க ஒரு தலைவராக காஸ்ட்ரோ உயர்ந்து நிற்பது இந்த நூற்றாண்டின் தீர்மானகரமான தருணங்களில் ஒன்று. காஸ்ட்ரோவின் புரட்சி மனப்பான்மையின் வேர், அவரது விடுதலை வேட்கையில் இருந்தது. தேச விடுதலைக்காக, ஏகாதிபத்திய ஒழிப்புக்காகச் சொத்து சுகங்களைத் தூக்கிப் போட்டுவிட்டுத் துப்பாக்கி ஏந்தி, காட்டுக்குள் போனவர் அவர். க்யூபாவை நூற்றாண்டுகால அடிமைத்தனத்திலிருந்து விடுவித்ததோடு பல துறைகளில் ஒரு வலுவான முன்னுதாரணமாகவும் அந்நாட்டை மாற்றிக்காட்டினார் காஸ்ட்ரோ. கடுமையான போராட்டங்களுக்கு மத்தியில், கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தான் இந்தப் புரட்சிகர மாற்றங்களை அவரால் ஏற்படுத்த முடிந்தது. காஸ்ட்ரோ நமக்காக விட்டுச் சென்றிருக்கும் மிகப்பெரிய செய்தி அவருடைய புரட்சிகரமான வாழ்க்கை . வீரமும், விடுதலை வேட்கையும் நெஞ்சுரமும் மிக்க காஸ்ட்ரோவின் அந்த உத்வேக மூட்டும் வாழ்க்கையை விரிவான வரலாற்றுப் பின்னணியோடு இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் மருதன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மருதன் :

வாழ்க்கை வரலாறு :

கிழக்கு பதிப்பகம் :