ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியம்

ஆசிரியர்: எஸ்.வி.ராஜதுரை வ.கீதா

Category கட்டுரைகள்
Publication விடியல் பதிப்பகம்
FormatPaperback
Pages 231
Weight300 grams
₹140.00 ₹133.00    You Save ₹7
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



‘ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியம்' நூலின் முதல் பதிப்பு வெளிவந்து சரியாக இருபதாண்டுகள் முடிவடைகின்றன. இந்த இருபதாண்டுக் காலத்தில் உலகளவிலும் இந்தியாவிலும் எத்தனையோ அரசியல், பொருளாதார, சமுக, பண்பாட்டு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மார்க்ஸியம் எதிர்பார்த்த சோசலிசப் புரட்சிகள் ஏதும் இந்தக் காலகட்டத்தில் நிறைவேறவில்லை. முன்னாள் சோவியத் யூனியனில் உறுப்பியம் வகித்த நாடுகள், கிழக்கு ஐரோப்பாவில் இருந்த பிற சோசலிச நாடுகள், வியெத்நாம், லாவோஸ், மங்கோலியா, சீனா ஆகிய அனைத்தும் முழு வீச்சில் முதலாளியப் பொருளாதாரத்தைக் கொண்டு வந்துள்ளன. சோசலிசத்தின் அடையாளங்கள் ஓரளவு இன்று கியூபாவிலும் இன்னும் சற்றுக் குறைவாக வெனிசூலாவிலும் மட்டுமே காணப்படுகின்றன. உலக முதலாளியம், ‘நவ தாராள வாதப் பொருளாதாரக் கொள்கைகளை' மிக மூர்க்க தனமாக நடைமுறைப்படுத்தி உலகின் பல்வேறு பகுதிகளிலுள்ள வெகுமக்களின் பொருளாதார நலிவு, பண்பாட்டுச் சீராழிவு, புவியின் இருப்புக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அளவுக்குச் சென்றுள்ள சுற்றுச்சூழல் (சூழலியல்) கேடு ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா ஆகிய முதலாளிய மையங்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருந்தாலும், அவற்றின் இராணுவ வலிமையோ பிற நாடுகளை ஆக்கிரமிக்கும் தன்மையோ சிறிதும் குறையவில்லை. கடந்த இருபதாண்டுகளில் அமெரிக்கா, நேட்டோ, ஐரோப்பிய யூனியன் ஆகியன முன்னாள் யூகோஸ்லேவியா, இராக், ஆஃப்கானிஸ்தான், சூடான், லிபியா ஆகிய நாடுகளில் ஆக்கிரமிப்புப் போர்களை நடத்தின, நடத்தி வருகின்றன....

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ்.வி.ராஜதுரை :

வ.கீதா :

கட்டுரைகள் :

விடியல் பதிப்பகம் :