அகநானூறு நித்திலக்கோவை
ஆசிரியர்:
புலியூர் கேசிகன்
விலை ரூ.200
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88?id=1086-6505-9423-0278
{1086-6505-9423-0278 [{புத்தகம் பற்றி அகநானூற்றை அழகுற முதற்கண் ஆய்ந்து பதிப்பித்த சான்றோர் கம்பர் விலாசம் இராஜகோபால அய்யங்கார் அவர்களாவர்பரிசோதித்தோர் மகாவித்துவான் ரா. ராகவய்யங்கார் அவர்களாவர். அடுத்து, உரையொன்றினை நூல் முழுமைக்குமே வகுத்த பெரியார் கரந்தைக் கவியரசு ரா. வேங்கடாசலம் பிள்ளையவர்கள். அது நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் துணையுடன் வெளிவந்தது. சைவ சித்தாந்த மகா சமரசத்தார் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையவர்கள் துணையுடன் சங்க இலக்கியங்கள் அனைத்தையுமே புலவர் வரிசையிலே வெளியிட்டனர். அண்மையில் மர்ரே கம்பெனியார் அகநானூற்று மூலத்தை மட்டும் நன்கு ஆராய்ந்து வெளியிட்டனர். இவர்கள் அனைவரும் செய்த பெரும்பணியினாலேயே அகநானூற்றை அறிந்தறிந்து அனுபவிக்கும் பெருவாய்ப்புத் தமிழ் அன்பர்களுக்கு நெடுகிலும் வாய்த்தது.
<br/> எனினும், பலரும் எளிதிலே கற்று இன்புற வேண்டுமானால் எளிய தெளிவுரை ஒன்றும் இன்றியமையாதது எனக் கருதி, அந்தத் தேவையை நிறைவு செய்ய முயல்வதே இந்நூலின் நோக்கமாகும். நூலினை அனுபவிக்க உதவும் வகையிலே, பாடினோர் வரலாறுகளும், பாடப்பட்டோர் வரலாறுகளும் பின்னிணைப்புக்களாக மிளிர்வது இந்நூலின் தனித்த சிறப்பாகும். தெளிவான உரையும், மற்றும் தேவையான குறிப்புக்களும், விளக்கங்களும் ஆங்காங்கே தரப்பட்டிருக்கின்றன. அவை செய்யுளைக் கற்பவர்க்குப் பெரிதும் உதவுவன.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866