அகமும் புறமும்
ஆசிரியர்:
பரமன் பச்சைமுத்து
விலை ரூ.200
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1966-8130-2289-5212
{1966-8130-2289-5212 [{புத்தகம்பற்றி அகமும் புறமும் புறத்தில் எதனோடு நான் சேர்கிறேன் என்பதைப் பொறுத்து என் அகம் மாறுகிறது. என் அகத்தின் உள்ளடக்கத்தைப் பொறுத்து என் புறத்தை நான் பார்க்கும் விதம் மாறுகிறது. ஒரு வகையில் என் புறத்தையே மாற்றுகிறது. பார்வை மாறும்போது, பொருள் மாறுகிறது, எல்லாமே மாறுகிறது. புறத்தே இருப்பதுதான் அகத்தில் நுழைகிறது. அகத்தில் இருப்பதை கொண்டே புறத்தில் தெரிகிறது. இந்தோனேசிய சுமித்ரா தீவுக்கப்பால் ஆழியின் அடியாழத்தில் நீரில் நேர்ந்த ஒரு அடுக்கு நகர்வு சுனாமியாக உருவெடுத்து நிலத்தில் தாக்கியது போல, அகத்தில் ஏற்படும் ஒரு நகர்வு புறத்திலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவே செய்கிறது. வெளியிலிருந்து வீட்டைப் பார்க்க எப்படி இருக்கிறது என்று பார்ப்பது எவ்வளவு முக்கியமோ- வீட்டினுள்ளிருந்து வெளியே பார்ப்பதும் அவ்வளவு முக்கியமே! அகமும், புறமும் இணைந்ததே வாழ்க்கை . என் புறத்தில் நடந்த நிகழ்வுகள், என் அகத்தில் சில வேதிவினைகளை புரிந்துவிட்டுப் போயின. என் அகத்தினுள்ளே ஏற்பட்ட சில மாற்றங்கள் என் புறத்தில் சிலவற்றை மாற்றிப் போட்டுவிட்டன. கடந்த ஓராண்டில் வாழ்க்கை என் முன்னே காட்டிய நிகழ்வுகளால் என் அகத்திலும், புறத்திலும் ஏற்பட்ட மாறுதல்கள், அவை ஏற்படுத்திய எண்ணங்கள், அதில் விளைந்த) கட்டுரைகள்}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866