அங்கோர்வாட் ஓர் அற்புதக்கோவில்

ஆசிரியர்: வே. காசிநாதன்

Category வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 176
ISBN978-93-82689-10-2
Weight200 grams
₹180.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சோழர்களோ, பல்லவர்களோ படையெடுத்துச் சென்று வெற்றி பெற்று ஆட்சி நடத்திய காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் அதனை விட்டு வந்தபின்னர் ஏற்பட்ட உலகப் போர்களினாலும் உள் நாட்டுப் போர்களினாலும் சிதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
வரலாற்று ஏடுகளை வேடிக்கைப் பார்க்காமல் நேரில் சென்று உண்மையைக் கண்டு வெளிப்படுத்த வேண்டும் என்றும், தமிழனின் கடந்த கால வரலாற்றுச் சுவடுகளை வெளிச்சப்படுத்தி அடையாளப்படுத்த வேண்டும் என்றும், தமிழ்மொழி இன உணர்வுடைய சாதனைச் செல்வர், வழக்கறிஞர், ஆசிரியர் வே. காசிநாதன் அவர்கள் முயற்சி செய்து அங்கோர்வாட் கோயிலுக்கு நேரே சென்று ஆய்வு செய்து உண்மை நிலையினை எடுத்துக் காட்டியுள்ளார். இனவுணர்வும் மொழியுணர்வும் சமுதாய அக்கறையும் வெளிப்படும் வகையில் இந்நூலை வரைந்துள்ளார். மறைந்து போன, மறைக்கப்பட்ட அற்புதத்தையும் விஞ்சும் அதிசயக் கோயில் வரலாற்றை வெளிப்படுத்தி தமிழனின் பெருமையை உலகறியச் செய்துள்ளார் இந்த உலகம் சுற்றும் வாலிபனாகிய ஆசிரியர்.
இத்தகைய அறியதொரு கலைப்படைப்பை, தமிழனின் பண்பாட்டுக் கருவூலத்தை உலகம் கண்டு வியக்கும் வகையில் காணக் கண்கோடி வேண்டும் என்னும் வகையில் பல்வேறு கோணங்களில் சிறப்பாக வடித்துள்ள இந்நூலை எமது பதிப்பகத்தின் மூலம் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வே. காசிநாதன் :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :