அசன்பே சரித்திரம்

ஆசிரியர்: எம்.ஏ. நுஃமான்

Category நாவல்கள்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaperback
Pages 226
ISBN978-81-7720-137-6
Weight100 grams
₹130.00 ₹117.00    You Save ₹13
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இலங்கையிலும் இஸ்லாமிய உலகிலும் பெரிய அளவு சமூக அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த எம்.சி. சித்திலெப்பை (1838-1898), முஸ்லிம் உலகின் மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்களான ஜலாலுத்தீன் ஆஃப்கானி, முகம்மத் அப்து, சர் செய்யத் அகமத்கான் ஆகியோரின் சமகாலத்தவர். அவர்களின் சிந்தனையால் கவரப்பட்டவர். இலங்கையில் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கும் முஸ்லிம் இனத்துவ உருவாக்கத்துக்கும் ஒரு கருத்துநிலைச் சட்டகத்தை அமைத்துக்கொடுத்தவர். மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் வெளிவந்து ஐந்து ஆண்டுகளின்பின் 1884இல் முஸ்லிம் நேசன் இதழில் தொடராக வெளிவந்து 1885இல் என் நூலுருப்பெற்ற அசன்பே சரித்திரம் இலங்கையின் முதலாவது நாவலாகவும் தமிழின் இரண்டாவது நாவலாகவும் கருதத்தக்கது. சித்திலெப்பையின் சமூக, அரசியல் சிந்தனைகளின் இலக்கிய வெளிப்பாடாக இந்நாவல் கம் அமைகின்றது.மேற்குலகுக்கும் இஸ்லாத்துக்கும் இடையிலான பண்பாட்டுத் திருமணம் பற்றிய ஒரு முற்போக்கான பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பார்வையை முன்வைக்கும் இந்நாவல், மேற்குலகும் முஸ்லிம் உலகும் பகைமை கொண்டு முரண்பட்டு நிற்கும் இன்றையச் சூழலில் நமது முக்கிய கவனத்துக்குரியது.

உங்கள் கருத்துக்களை பகிர :
எம்.ஏ. நுஃமான் :

நாவல்கள் :

அடையாளம் பதிப்பகம் :