அசைவ பிரியாணி வகைகள்

ஆசிரியர்: விஜயலஷ்மி சுத்தானந்தம்

Category சமையல்
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaper Back
Pages 144
ISBN978-93-5135-188-7
Weight150 grams
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பிரியாணியை ரசிக்காதவர்களும் ருசிக்காதவர்களும் இல்லை. அம்மி, உரல் காலத்து பாட்டி, தாத்தா முதல் இன்றைய மிக்ஸி, ஓவன், இண்டெர்நெட் தலைமுறை வரை அனைவருமே பிரியாணியின் பரம விசிறிகள்தாம். இத்தனைக்கும் நாம் ஒரு சில பிரியாணி வகைகளை மட்டுமே சுவைத்திருப்போம். அதன் அத்தனை வடிவங்களும்/வகைகளும் தெரிந்தால் ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஒரு குட்டி மயக்கமே வந்துவிடும். பனீர் மட்டன் பிரியாணி, மட்டன் மிளகு பிரியாணி, கொத்துக் கறி கோஸ் பிரியாணி, கறி கோஃப்தா பிரியாணி, ஷாகி மட்டன் பிரியாணி, பாலக் கீரை& காளான்&சிக்கன் பிரியாணி , இறால் காலிஃபிளவர் பிரியாணி, முட்டை கைமா பிரியாணி என எண்ணற்ற, வகைவகையான பிரியாணிகளுடன் அந்தந்த ஊர்களுக்கே/மாநிலங்களுக்கே உரித்தான செட்டிநாட்டு ஆட்டுக்கறி பிரியாணி, டெல்லி தாபா பிரியாணி, மலபார் மட்டன் பிரியாணி, ஆம்பூர் சிக்கன் பிரியாணி, மலேஷியன் சிக்கன் பிரியாணி, ஹைதராபாத் ஃபிஷ் பிரியாணி இன்னும் காடை பிரியாணி, வாத்துக் கறி பிரியாணி, வான்கோழி பிரியாணி செய்முறைகளும் இந்தப் புத்தகத்தில் அணிவகுத்துள்ளன. உண்மையில் பிரியாணி என்பது ஒரு தனி உலகம். நகரத்துக்கு நகரம், மூலைக்கு மூலை வெவ்வறு வடிவங்களில், வெவ்வேறு ருசிகளில் பிரியாணி சமைக்கப்படுகிறது. அவற்றில் சிறந்த பிரியாணி வகைகளை மட்டும் தேர்ந்தெடுத்து செயல்முறை குறிப்புகளுடன் அறிமுகப்படுத்துகிறது இந்தப் புத்தகம். பிரியாணி வகைகள் மட்டுமல்ல வெஜிடபிள் புலாவ், ஃப்ரைட் ரைஸ் ரெசிப்பிகள் என 100க்கும் மேலான சமையல் குறிப்புகளுடன் கூடவே பிரியாணிக்குத் தொட்டுக் கொள்ள கிரேவி, குழம்பு ரெசிப்பிகளும், மசாலா, தொக்கு வகைகளும், தயிர் பச்சடி, கத்தரிக்காய் பச்சடி குறிப்புகளும் கொண்ட அசத்தல் புத்தகம் இது. இந்தப் புத்தகம் உங்கள் கையிலிருந்தால் பிரியாணி சமையலில் முடிசூடா மகாராணி/மகாராஜா நீங்கள்தான். சமைத்து அசத்துங்கள். பாராட்டுகளை அள்ளிக் குவியுங்கள்.
கமகமக்கும் ஒரு புது உலகம் உங்களை வரவேற்கிறது!

உங்கள் கருத்துக்களை பகிர :
விஜயலஷ்மி சுத்தானந்தம் :

சமையல் :

கிழக்கு பதிப்பகம் :