அடூர் கோபாலகிருஷ்ணன்

ஆசிரியர்: ராணி மைந்தன்

Category வாழ்க்கை வரலாறு
Publication விகடன் பிரசுரம்
FormatPaper Back
Pages 256
ISBN978-81-8476-370-6
Weight250 grams
₹95.00       Only 3 copies left! Delivery in 4-7 Days

Out of Stock!

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



வெள்ளித்திரை என்ற வார்த்தையே வாழ்வின் எல்லையாக வரையறுத்துக் கொண்டு செயலாற்றும் பலர், நாளைய திரை உலகம் நம்மையும் உற்றுப் பார்க்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.
திரையில் வரும் நட்சத்திரங்கள் அனைவரையும் மக்கள் அறிவர். ஆனால், அந்தத் திரையின் பின்னணியில் இருக்கும் படக்குழுவினரை இயக்கி, தரமான ஒரு படத்தை உருவாக்கும் இயக்குநர்களில் ஒரு சிலரை மட்டுமே மக்கள் அறிவர். அந்த வரிசையில், மலையாளத் திரை உலகில் தனக்கென ஒரு சிறப்பான முத்திரைப் பதித்த மாபெரும் இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன்.
இந்தியாவின் முதன்மையான திரைக் கலைஞர்களில் ஒருவரான அடூர் கோபாலகிருஷ்ணனின் இளமைக்கால வாழ்க்கை, குடும்ப உறவினர்கள், கடந்துவந்த வாழ்க்கைப் பாதை போன்றவற்றை ஒரு பகுதியாகவும், திரையுலக அனுபவங்கள், இயக்கிய திரைப்படங்கள் மற்றும் சக கலைஞர்களுடனான தொடர்புகள் போன்ற நிகழ்வுகளை மற்றொரு பகுதியாகவும் தொகுத்துள்ளார் நூலாசிரியர் கௌதமன் பாஸ்கரன்.
இவர் ஆங்கிலத்தில் எழுதிய Adoor Gopalakrishnan என்ற நூலின் தமிழாக்கத்தை, இயல்பான நடையில் மொழிபெயர்த்துள்ளார் ராணிமைந்தன்.
அடூரின் திரைப்படங்கள் குறித்த சுவாரஸ்யமான நிகழ்வுகளும், படக்காட்சிகளும் இந்த நூலில் இடம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.
அடூரின் எண்ணத்திரையில் ஓடிய வண்ணக்காட்சிகள் இப்போது எழுத்து வடிவில் உங்கள் ரசனைக்காக.

உங்கள் கருத்துக்களை பகிர :
வாழ்க்கை வரலாறு :

விகடன் பிரசுரம் :