அட்சய லக்ன பத்ததி பாகம்-1
₹160.00 ₹152.00 (5% OFF)

அட்சய லக்ன பத்ததி பாகம் - 2

ஆசிரியர்: சி.பொதுவுடைமூர்த்தி

Category ஜோதிடம்
Publication புலம்
FormatPaperback
Pages 336
ISBN978-81-9078-852-6
Weight400 grams
₹280.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



வேதத்தின் ஆறு பாகங்களில் ஜோதிடமும் ஒன்று. ஜோதிடர்கள் கிரகங்களின் அசைவினைக் கொண்டு, பலன்களை முன்கூட்டியே அறிவிக்கிறார்கள். ஜோதிடம் தொடர்பான நூல்களும் கிரகங்களின் அசைவைக் கொண்டே பலன்களை எடுத்துரைத்துள்ளன. ஆனால் 'அட்சய லக்ன பத்ததி' என்னும் இந்நூலில் நூலாசிரியர் திரு.பொதுவுடைமூர்த்தி, ஜோதிடத்தில் உள்ள அடிப்படை விஷயங்களை ஆராய்ந்து உரைத்திருப்பதை உணர முடிகிறது. மேலும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் தன்மை, அதற்கான பரிகாரங்கள் யாவும் இம்முறையில் தெள்ளத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது சிறப்பாகும்.
பாரம்பரிய ஜோதிட முறையில் பிறப்பு முதல் இறப்பு வரை ஒரே லக்னத்தை வைத்துப் பலன் கூறப்படுகிறது. அதனை மாற்றி உடல் வளர்ச்சிக்கு ஏற்பவே லக்னமும் வளர்கிறது, ஜாதக பலனும் மாறுகிறது என்பதை அட்சய லக்ன பத்ததி எனும் இப்புதிய . ஜோதிட முறை எடுத்துரைக்கின்றது. இந்த ஆராய்ச்சியின் முடிவு இப்புத்தகத்தின் ஆக்கமாக அமைந்துள்ளது. அட்சய லக்ன பத்ததி முறையில் ஆய்வு செய்து, தரவுகளைத் தொகுத்துத் தந்திருப்பது நூலுக்குக் கூடுதல் சிறப்புச் சேர்க்கின்றது.
“அட்சய லக்னமும் ராசியும் இரு தண்டவாளங்கள் 1 இரண்டும் சம அளவில் அல்லது ஒன்றை ஒன்று சார்ந்து இயங்கினால் மட்டுமே வாழ்க்கை எனும் வண்டி மிகப் பெரிய வெற்றி பெறும்.”என்ற கருத்தினை ஆசிரியர் அழுத்தமாகக் குறிப்பிடுகிறார். உடலும் மனமும் அட்சய லக்னம், அட்சய ராசி எனும் இரு பிரிவுகளில் அடங்கியுள்ள விதம் எளிய முறையில் நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சி.பொதுவுடைமூர்த்தி :

ஜோதிடம் :

புலம் :