அதிர்ஷ்டக் கற்களும் அறிவியல் உண்மைகளும்

ஆசிரியர்: ஏற்காடு இளங்கோ

Category அறிவியல்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaper Back
Pages 64
Weight100 grams
₹60.00 ₹54.00    You Save ₹6
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மக்கள் வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சனைகள் உள்ளன. அதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அறிவியல் பூர்வமாக சிந்தித்து அதற்கு விடையும், தீர்வும் காண வேண்டும்.
நம்மிடையே பரம்பரை பரம்பரையாக பின்பற்றி வரும் பழக்க வழக்கங்களும், பல நம்பிக்கைகளும் இருந்து வருகின்றன. அவற்றிற்கும் அறிவியலுக்கும் தொடர்பு உள்ளதா எனப் பார்க்க வேண்டும். எதையும் அறிவியல் பார்வையோடு பார்க்க வேண்டும். ஏனெனில் நமது அன்றாட வாழ்வில் அறிவியல் இரண்டறக்கலந்து உள்ளது. அறிவியலுக்குப் புறம்பான கருத்தை தவிர்க்க வேண் டும். அதை மாற்ற வேண்டும். ஆனால் இன்றைக்கு பொதுவாக மீடியாக்கள் மக்கள் மத்தியில் உள்ள தவறான நம்பிக்கைகளை மாற்றுவதற்குப் பதிலாக அதன்மீது மேலும் மூட நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலேயே செய்திகளை வெளியிட்டு வருகிறது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மக்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மை, அறிவியல் விழிப்புணர்வு ஆகியவற்றை ஏற்படுத் தும் நோக்கோடு செயல்பட்டு வருகிறது. இவ்வியக்கத்தின் அங்கத் தினராகிய நான், எனக்குத் தெரிந்த அறிவியல் கருத்துக்கைளயும், அறிவியல் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் இந்த புத்தகத்தை எழுதியுள்ளேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஏற்காடு இளங்கோ :

அறிவியல் :

கௌரா பதிப்பக குழுமம் :