அனுபவ வாஸ்து சாஸ்திரம்

ஆசிரியர்: வந்தைமாலன்

Category வாஸ்து
Publication மாலன் பிரசுரம்
FormatPaper pack
Pages 165
Weight150 grams
₹75.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereமனிதன் பகுத்தறிவு பெற்றவன், அதனால் அவன் சிந்திக்கத் தொடங்கினான். விளைவு! தன் வசதிக்கேற்ப ஒரு கனவு இல்லத்தை அமைத்துக்கொள்ள விரும்பினான்.அக்கனவு இல்லம் எவ்வாறெல்லாம் எப்படியெப்படியெல்லாம் அமைக்கப்பட வேண்டும் என்பதைப்பற்றி நமது முன்னோர்கள் சில விதிமுறைகளை வகுத்துள்ளார்கள்.வாஸ்து சாத்திர நூல் செய்யுள் வடிவில் தோன்றியது. எவருக்கும் எட்டாத சிகரத்தில் இருந்த வாஸ்து சாத்திர நூலை எளிமைப்படுத்தி, அனைவரும் எளிதில் ஏற்றுப் புரிந்து கொள்ளும் வண்ணம் உங்கள் கரங்களில் தவழவிட்டுள்ளார் வந்தைமாலன் அவர்கள்.எவரின் துணையுமின்றி, எவ்வித ஐயமுமின்றித் தாமாகவே தமது இல்லத்தினை விரும்பியவாறு அமைத்துக்கொள்வதற்கு இவ்வரியநூல் ஒரு சிறந்த வழிகாட்டி; நல்ல துணைவன். இதற்காக அவர் எடுத்துக்கொண்ட பெருமுயற்சியும், பேருழைப்பும் அளவிடற்கரியது. கட்டடப் பொறியாளர்களும், கட்டடக்கலைஞர்களும் இந்நூலினைப் பெரிதும் வரவேற்பர். இந்நூலின் கண் எல்லாம் உள்: இதன்பால் இல்லாதது இல்லை .இந்நூலாசிரியருக்கு இந்த ஒரு முகம் மட்டுமன்று, அவருக்கு பல்வேறு முகங்கள் உண்டு. சிறந்த புகைப்படக் கலைஞர், எழுத்தாளர், நல்ல மேடைப் பேச்சாளர், நீரியல் நிபுணர், எண்கணித சாத்திர வித்தகர் என வெளிச்சத்திற்கு வராத பல்கலைவாணர். தாம் ஈடுபடும் துறைகளில் தனி முத்திரைப் பதிக்க விரும்பும் துடிப்பு மிக்க ஆர்வலர். இது உண்மை . வெறும் புகழ்ச்சியில்லை . !இந்நூலாசிரியரின் முதல் முயற்சி இது. ஆனால், இந்நூலின் நடை எளிமை அவரது அனுபவ முதிர்ச்சியைப் படம் பிடித்துக் காட்டுகிறது. பல நூல்களைப் படைத்த பட்டறிவுப் படைப்பாளிகளையே விஞ்சும் அளவிற்கு இந்நூல் விளங்குகின்றது. நூலின் சிறப்பினை மேலும் "விரிப்பின் அகலும் தொகுக்கின் எஞ்சும்" நீங்களே படித்துச் சுவைத்து அனுபவியுங்கள்.இந்நூலாசிரியர் எதிர்வரும் காலத்தில் படைப்பாளிகளின் நிரலில் முதலிடம் பெறவேண்டும் என்பதே எனது பேரவா. இந்நூலாசிரியர் பல்லாண்டு காலம் வாழ்ந்து, அரிய பல படைப்புகளை தமிழுலகுக்கு வழங்கவேண்டுமென எல்லாம் வல்ல சிவ பரம்பொருளை இறைஞ்சுகின்றேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வந்தைமாலன் :

வாஸ்து :

மாலன் பிரசுரம் :