அன்னா ஸ்வீர் கவிதைகள்

ஆசிரியர்: சமயவேல்

Category கவிதைகள்
Publication தமிழ்வெளி
FormatPaper Pack
Pages 128
ISBN978-81-93691-01-4
Weight150 grams
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தனது கவிதைகளில், 'ஓர் உயிரின் ஆர்ப்பரிக்கும்அடங்கா ஆசைகளை ரத்தமும் சதையுமாக எழுத , 'முயற்சித்ததாகக் குறிப்பிடும் அன்னா ஸ்விர் (1909-1984), 'போலந்தின் மிக முக்கியமான கவிகளில் ஒருவர். 1 பெண்ணியம், காமக்கிளர்வு வழியாக வெளிப்படும் அவரது கவிதைகள், பெண் உடலின் வாதைகளையும், 'சந்தோஷங்களையும் ஒருங்கே பதிவு செய்கின்றன. இரண்டாம் உலகப் போரில் வார்ஸா' நகரமும் அதன் ஒரு மில்லியன் மக்களும் மொத்தமாக அழிந்து போனதை 'நுண்சித்திரக் கவிதைகளாகப் பதிவு செய்தவர். ஏழ்மை மிக்க ஒரு ஓவியரின் மகளாக வளர்ந்த அவர், தனது அப்பாவையும் அம்மாவையும் பற்றிய கவிதைகளில், 'மிகக் குறைந்த சொற்களில் பெரும் வலி கொண்ட சொற்சித்திரங்களை வரைந்துவிடுகிறார். மிகத் தீவிரமான அவரது சொந்த வாழ்வின் அனுபவங்களின் வழியாக ஊற்றெடுக்கும் அவரது கவிதைகள், மொத்த வாழ்வின் அர்த்தமின்மை, அர்த்தம் ஆகிய இரண்டிலும் காலூன்றிநிற்பதின் முரண்சிக்கலை மிக எளிதாகக் கடந்துவிடுகின்றன. 'நோபல் பரிசு பெற்ற கவிஞர் சீஸ்லாவ் மிலோஸ்ச், உலகெங்கிலுமுள்ள பெண் கவிகளில் மிக வித்தியாசமானவர் 'அன்னா ஸ்விர் என இவரைக் கொண்டாடுகிறார்.


உங்கள் கருத்துக்களை பகிர :
சமயவேல் :

கவிதைகள் :

தமிழ்வெளி :