அன்னை தெரசா

ஆசிரியர்: பட்டத்தி மைந்தன்

Category வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 176
Weight200 grams
₹140.00 ₹126.00    You Save ₹14
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வாழ்ந்த காலத்தில் எண்ணற்ற விருதுகளையும் சிறப்புகளையும் பெற்ற அன்னை தெரசா அவர்கள், மறைந்த பின்னர் போப்பாண்டவரால் "அருளாளர்” என்ற பட்டத்தால் போற்றப்பட்டார்.
அன்னை தெரசா விட்டுச் சென்ற அரும்பெரும்பணிகளை - அல்ல அல்ல, அன்னையவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர் செய்து வந்த அரிய பணிகளையெல்லாம் அவர் வழி வந்தோர் அதாவது அன்னையவர்களின் அருமைச் சகோதரிகளும் சகோதரர்களும் தொடர்ந்து செய்தால் போதும்; இவ்விதம் அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருப்பது வரை - அதாவது அந்தப் புனிதமான தொண்டு தொடரும் வரை அன்னையவர்கள் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் என்பதில் சந்தேகமேயில்லை.
அன்னையவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர் செய்த செயற்கரிய தூய தொண்டுகளால் அவர் பெற்ற புகழ், காலத்தால் அழிக்கவே முடியாத பெரும் புகழாகும் என்பதில் ஐயமே இல்லை. இந்த உலகம் உள்ளளவும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மிகச் சிலரே, அவர்களில் ஒருவராக மட்டுமன்றி உயர்ந்தவராகச் சிறந்து நிற்கிறார் அன்னையவர்கள் என்றால் மிகையல்ல. வாழ்க அன்னையவர்களின் வற்றாத பெரும் புகழ்!

உங்கள் கருத்துக்களை பகிர :
பட்டத்தி மைந்தன் :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :