அப்பத்தா

ஆசிரியர்: பாரதி கிருஷ்ணகுமார்

Category சிறுகதைகள்
Publication The Roots
FormatPaperback
Pages 90
Weight150 grams
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இது முன்னுரையன்று. உங்களிடம் பரிமாறிக் கொள்ள எனக்கிருக்கும் சில நினைவுகளும் சொற்களுமே இவை. அம்மா ரொம்ப அழகு. எல்லா அம்மாக்களும் அழகுதான். பூவும், மஞ்சளும், அவளது வியர்வையும் கலந்த நறுமணம் இன்னும் நினைவில் இருக்கிறது. அவள் ஒரு நாள் அணிந்து கழற்றிவைத்த புடவையை விரித்துப் படுத்துக் கிடந்த போது கிடைத்த தூக்கம், உலகின் எந்த விலை உயர்ந்த படுக்கையிலும் இன்றுவரை கிடைக்கவேயில்லை. அந்தப் புடவையில் இருக்கும் அவளது நறுமணமும் அளவான ஈரமும் பித்தர்களையும் உறங்க வைத்துவிடும்.
அளவில் சற்றுப் பெரியதான மழைத்துளி போன்ற அவளது குங்குமப் பொட்டு கலைந்து யாருமே பார்த்ததில்லை. மற்றவர்களுக்குக் கொடுப்பதில், குறைவற்ற மனம் கொண்டவள். அவளைப் பார்த்த பிறகு, பசித்த வயிற்றோடு யாரும் போய்விட முடியாது. பக்கத்தில் உட்கார்ந்து பரிமாறுவாள். பார்த்துப் பார்த்துப் பரிமாறுவாள். எதற்காகவும் எழுந்து போகாமல், அப்படிப் பரிமாறும் ஆற்றல் அவளிடம் மட்டுமே பார்த்திருக்கிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாரதி கிருஷ்ணகுமார் :

சிறுகதைகள் :

The Roots :