அமெரிக்க உளவுத் துறை FBI ரகசியங்கள்

ஆசிரியர்: என்.சொக்கன்

Category அரசியல்
Publication கிழக்கு பதிப்பகம்
Formatpaperpack
Pages 152
ISBN978-93-84149-95-6
Weight200 grams
₹150.00 ₹112.50    You Save ₹37
(25% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அமெரிக்காவின் புகழ்பெற்ற அதே சமயம் மிகுந்த சர்ச்சைக்குரிய புலனாய்வு அமைப்பு FBI. அமெரிக்காவைக் கடந்து உலகம் முழுவதிலும் இந்த அமைப்பின் நிழல் பரவிக்கிடக்கிறது. அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வ தொன்றே அவர்களுடைய ஒரே லட்சியம். அதற்காக எதையும் செய்யச் சித்தமாகயிருக்கிறது FBI. ஜேம்ஸ் பாண்ட் படக் காட்சிகளை மிஞ்சும் பல சாகசங்களை இவர்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள், நவீன தொழில்நுட்பத்தையும் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் பயன்படுத்தி பல நூதனமான உத்திகளைக் கையாண்டு உளவு பார்த்திருக்கிறார்கள். தேச பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறார்கள். அமெரிக்கக் காவல் துறையினரால் சமாளிக்கமுடியாத பல மர்ம கிரிமினல் வழக்கு களைத் திறம்படக் கையாண்டு பாராட்டுகளைக் குவித்திருக் கிறார்கள். உலகம் முழுவதிலும் FBIக்கு பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவர்களுக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. வெளியில் தெரியாத இந்த முகத்தைக்கொண்டு FBI பல நிழலுலகக் காரியங் களில் ஈடுபட்டுவருகிறது. சட்டத்தை வளைத்தும் தேவைப் பட்டால் முழுக்க உடைத்தும் பலவற்றை அவர்கள் செய்திருக் கிறார்கள். அவை மிகுந்த சர்ச்சைகளையும் விவாதங்களையும் அவ்வப்போது கிளப்புவது வழக்கம். என். சொக்கனின் இந்தப் புத்தகம் FBI என்னும் அதிசய, ரகசிய உலகை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. கேஜிபி, சிஐஏ, மொஸாட் ஆகிய உளவு நிறுவனங்கள் குறித்தும் இவர் எழுதியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
என்.சொக்கன் :

அரசியல் :

கிழக்கு பதிப்பகம் :