அமைப்பியலும் அதன் பிறகும் (ஸ்ட்ரக்சுரலிசம் நூலின் விரிவாக்கப்பட்ட பதிப்பு)

ஆசிரியர்: தமிழவன்

Category இலக்கியம்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaperback
Pages 406
ISBN978-81-7720-064-5
Weight450 grams
₹250.00 ₹242.50    You Save ₹7
(3% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மேற்பரப்புக்கு அல்லது பொருள் தருவதுபோல் தோற்றமளிப்பதற்குப் பின்னணியில் இருக்கும் உண்மையான அர்த்தம் அமைப்பியல் ஆகும். அது ஒரு புதிய சிந்தனை, தனிமனிதர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், உலகின் இயக்கத்தை அமைப்புகளின் இயக்கமாய் அறியும் முறை. இது மனித மனதின் மொழியமைப்பைச் சிந்தனையின் அமைப்பாய் விளக்கியதால், பல உலகப் போக்குகள் புதிய வெளிச்சம் - பெற்றன; மானிடவியல், மார்க்சியம், இலக்கியம், வரலாறு என்று சகல) சிந்தனைத் துறைகளும் உலகம் முழுவதும் புதிய அர்த்தமும் ஆழமும் , கொண்டன. 1982ஆம் ஆண்டு தமிழில் அறிமுகமானதிலிருந்து இன்று வரை இலக்கியத்தையும் அரசியலையும் பொதுவான சிந்தனையையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்துக்கொண்டே வருகிறது : கல்வித்துறைகளில் உள்ளவர்களும், மொத்த சமூக மாந்தர்களும் , தம் இயல்பான சிந்தனை முறையை மாற்றும் தேவையை உருவாக்கி, இருக்கிறது. தங்களின் சிந்தனை மாறியுள்ளதால் வாழ்க்கையும் | நினைப்பும் புதிய தளத்தில் சென்றுகொண்டிருப்பதாகப் பலரும் உணர்கின்றனர். மேற்கின் தத்துவ, தாக்க, திசைவழியில் நம் சிந்தனையில் ஒரு பிரளய மாற்றத்தைச் செய்ய இந்நூல் சுமார் ஐம்பது ஆண்டுகளாகப் பலருக்கும் பயன்படுகிறது. அமைப்பியலுக்குப் பிறகு என்ன என்பதையும் சுட்டுகிறது இந்த நூல், உலகப் புகழ்பெற்ற சசூர், லெவிஸ்ட்ராஸ், அல்துஸ்ஸர். பார்த போன்ற சிந்தனையாளர்கள் பற்றியும் கூறும் இந்நூல், விரிவாக்கப்பட்ட புதிய பதிப்பாக இப்போது உங்கள் கைகளில் தவழ்கிறது.நூலாசிரியர் தமிழவன் நாவல், சிறுகதை, கட்டுரை என எழுபதுகளிலிருந்து தொடர்ந்து அறிவு சார்ந்த எழுத்துகளைத் தந்துகொண்டிருக்கிறார். பெங்களூர், போலந்து நாட்டு வார்ஸா, திராவிடப் பல்கலைக் கழகங்களில் பேராசிரியராக இருந்தார். ஜெர்மனி, பின்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா முதலிய நாடுகளில் நடைபெற்ற அனைத்துலகக் கருத்தரங்குகளில் பங்கேற்றிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தமிழவன் :

இலக்கியம் :

அடையாளம் பதிப்பகம் :