அம்பேத்கரியர்கள்: நெருக்கடியும் சவால்களும்

ஆசிரியர்: ஆனந்த் டெல்டும்டே

Category சமூகம்
Publication விடியல் பதிப்பகம்
FormatPaperback
Pages 55
ISBN978-81-8986-736-2
Weight100 grams
₹35.00 ₹33.25    You Save ₹1
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நன்கு அறியப்பட்டுள்ள சிந்தனையாளரும் தலித், இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து களப்பணிகள் மேற்கொள்பவரும் மனித உரிமைப் போராளியுமான முனைவர் ஆனந்த் டெல்டும்டே, பொதுவாக இந்தியாவிலும், குறிப்பாக மகாராஷ்டிரத்திலும் உள்ள தலித் இயக்கங்களின் (அம்பேத்கரிய இயக்கங்களின்) இன்றைய நிலை, அவை எதிர்கொள்ளும் நெருக்கடிகள், புரட்சிகரமான சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த அவை சந்திக்க வேண்டிய சவால்கள் ஆகியனவற்றை அண்ணல் அம்பேத்கர் நினைவுச் சொற்பொழிவொன்றின் மூலம் எடுத்துக்கூறுகிறார். அவரது கருத்துகளுடன் முழுமையாகவோ, ஓரளவோ ஒத்துப்போகாத வர்களும்கூட ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டிய பிரச்சனை களை எழுப்புகிறார். தலித் (அம்பேத்கரிய) இயக்கங்கள் குறித்தும் அவர் கூறும் கருத்துகள் தமிழகத்தில் சாதி ஒழிப்பு இயக்க மரபுக்கு உரிமை கொண்டாடும் பெரியாரிய இயக்கங் களுக்கும் பொருந்தும்.

மகாராஷ்டிர மாநிலத்தின் விதர்பா பகுதியில் நிலமற்ற விவசாயத் (தலித்) தொழிலாளர் குடும்பத்தில் பிறந்த முனைவர் ஆனந்த் டெல்டும்டே, பொறியியல் பட்டப் படிப்பை முடித்த பின், வணிக நிர்வாகத்தில் முதுநிலைப் பட்டமும், மேலாண்மைக் கல்வியியலில் முனைவர் பட்டமும் பெற்றார். அரசியல், பொருளாதாரம், நவீன அறிவியல் தொழில்நுட்பம், தத்துவம், இலக்கியம் முதலிய பல்வேறு துறைகளில் ஆழ்ந்த அக்கறையும் விரிவான படிப்பும் துறைகளில் ஆழ்ந்த அக்கறையும் விரிவான படிப்பும் கொண்ட டெல்டும்டே, தனது மாணவப் பருவத்திலிருந்தே மக்கள் போராட்டங்களில் பங்கேற்று வந்திருக்கிறார். 1970களில் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற கட்டடத் தொழிலாளிகள் போராட்டம், 1960களில் நடந்த மும்பை நாற்பாலைத் தொழிலாளர்கள் போராட்டம், குடிசைவாழ் மக்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டங்கள் என அவர் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் இன்றுவரை தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆனந்த் டெல்டும்டே :

சமூகம் :

விடியல் பதிப்பகம் :