அயோத்திதாசர் ஆய்வுகள்-தொகுதி 1
ஆசிரியர்:
அயோத்திதாசப் பண்டிதர்
விலை ரூ.175
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+1?id=1652-0875-7563-3505
{1652-0875-7563-3505 [{புத்தகம்பற்றி முற்காலம் இந்தியாவில் குடியேறி, தற்காலம், பிராமணர், வேதியர், அந்தணர், இருபிறப்பாளர், ஸாஸ்திரி, பூதேவர் என்று பலவித மரியாதைப் பெயர்களோட, வழங்கி வாழ்ந்து வரும் ஒரு சிறு கூட்டத்தார்களாகிய பாரசீக தேச சோம்பேறிகளுக்கே மறைமுகத்தோரென்று புகழ்ந்து, அவர்களின் பாதாரமே துணை என நம்பி மோசம் போய்க் கொண்டிருக் கிறார்கள். பிராமணர்களின் துர்போதனையால் எழுதப் பட்ட ஒவ்வொரு நூல்களும், தங்களை யுயர்த்தி, இந்திய பூர்வக் குடிகளாகிய பவுத்தர்களைக் தாழ்த்திக் கூறி வைத்துள்ளது. கற்றார்க்குக் கைக்கண்ணாடியாகும். எத்தேசத்திலாயினும் ஒரு பவுத்தன் தலை சிறந்து குடி களிடத்து அன்பு பாராட்டி வருவானாயின். அதனை யறிந்த பார்ப்பனர்கள் தங்கள் குலத்தவர்களை அல்லது காட்டு மனிதராகிய சூத்திரர்களை (இந்துக்களை) ஒருங்கே சேர்த்துவந்து (அவதாரஞ் செய்து) அவனைக் கெடுத்து, அந்நாட்டில் தங்களது பிராமண மதத்தைக் கைக்கொள்ளச் செய்து வருவார்கள். வந்துக் கொண்டிருக்கிறார்கள்.
<br/>} {பதிப்புரை அயோத்தி தாசப்பண்டிதர் தமிழகத்தில் தோன்றிய மிகச்சிறந்த சீர்திருத்தவாதியாவார். தந்தை பெரியார், அறிஞர் அம்பேத்கர் ஆகியோர்க்கு முன்னோடியாக பார்ப்பனர்களின் புராண குப்பைகளை ஆய்வு செய்து தமிழன் ஏடுவாயிலாகவும், சிறு சிறு வெளியீடுகள் வாயிலாகவும் பரப்பி வந்தவர். அவருடைய பரந்த, ஆழ்ந்த சிந்தனைகள் இன்னும் வெகுமக்களை சென்றடையவில்லை. ஆகவே அவருடைய கருத்துக்களை மீண்டும் மீண்டும் வெளியிட வேண்டிய தேவை உள்ளது. பண்டிதர் அயோத்திதாசர் மறைவுக்குபின் கோலார் தங்கவயலில் அப்பாதுரையார் அவர்கள் 1927 முதல் 1933 வரை தமிழன்' என்ற வார ஏட்டை நடத்தி வந்தார். அவர் அயோத்திதாசரின் படைப்புகளை சிறுசிறு வெளியீடுகளாக வெளியிட்டு வந்தார். அப்படைப்புகளைத் தேடிப் பிடித்து தலித்சாகித்ய அகாடமி வெளியிட்டது. தலித்சாகித்ய அகாடமி உரிமையாளர் அவர்களுக்கும் நன்றி அயோத்திதாசரின் நூல்களை நாட்டுடமை ஆக்கிய தமிழக அரசுக்கும் நன்றி.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866