சமூக புரச்சி அய்யா வைகுண்டர்
₹180.00 ₹174.60 (3% OFF)
அய்யா வைகுண்டர்
₹80.00 ₹77.60 (3% OFF)

அய்யா வைகுண்டர்

ஆசிரியர்: வெ.நீலகண்டன்

Category ஆன்மிகம்
Publication சூரியன் பதிப்பகம்
FormatPaper Pack
Pages 112
Weight150 grams
₹100.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



அய்யா வைகுண்டர் ஆன்மிக வழியில் சமூக மாற்றத்தை முன்னின்று நடத்திக் காட்டிய மகான்களில் முதன்மையானவர். சாதியின் பெயரால் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அடித்தட்டு மக்கள் மத்தியில் 'நல்ல மகனே, உனக்கு வரும் நற்காலம்’ என்ற நம்பிக்கையை விதைத்து, ‘குகையாளப் பிறந்தவனே, எழுந்திரடா என் குழந்தாய்’ என்று உத்வேகமூட்டி வழி காட்டியவர். ‘தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்’ என்ற கொள்கையோடு ஜீவித்த அய்யாவை மக்கள் இறை அவதாரமாக வணங்குகிறார்கள்.இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் உயர் சாதிக்காரர்களால் அடிமைப்படுத்தப்பட்டு பெரும் துயரை அனுபவித்த மக்களுக்கு விடுதலை உணர்வை ஏற்படுத்தி, ஆன்மிக வழியில் அவர்களை மேன்மையடையச் செய்தவர் அய்யா. நூற்று எழுபத்தைந்து ஆண்டுகளைக் கடந்து அய்யா வழி ஒரு மாபெரும் ஆன்மிக விருட்சமாக கிளை பரப்பி வளர்ந்திருக்கிறது.இந்த நூல் அய்யாவைப் பற்றியும், அய்யா வழியைப் பற்றியும் முழுமையான புரிதலை உருவாக்குகிறது. முத்துக்குட்டியாக பிறந்து மக்களின் வதையை அவதானித்தவர் எவ்விதம் இறை உருவெடுத்து வைகுண்டரானார்; அதற்காக அவர் நிகழ்த்திய மௌனத் தவம் எப்படி இருந்தது; திருவிதாங்கூர் சமஸ்தானம் மற்றும் உயர் சாதியினரின் பிடியில் இருந்து தம் மக்களை விடுவித்து எப்படி மேம்பாடு அடையச் செய்தார் போன்ற வரலாற்று மற்றும் ஆன்மிகத் தகவல்களை சுவையான நடையில் சொல்கிறது இந்த நூல்.அய்யா வழியில் மேற்கொள்ளப்படும் வழிபாட்டு நியமங்கள், அய்யா வழி மக்களின் பண்பாட்டுக் கூறுகள், அய்யா உறைந்திருக்கும் சாமித்தோப்பு வைகுண்டபதியில் நிகழும் விழாக்கள், அய்யா வழியின் வேதநூலாகக் கருதப்படும் அகிலத்திரட்டு, அருள்நூல் பற்றிய தகவல்கள், அய்யா போதித்த கருத்துகள் என அய்யா வழி சமூகத்தைப் பற்றிய முழுமையான தகவல்களை வாசகர்களுக்கு அளிக்கிறார் நூலாசிரியர்..

உங்கள் கருத்துக்களை பகிர :
வெ.நீலகண்டன் :

ஆன்மிகம் :

சூரியன் பதிப்பகம் :