அரசியல் அலைகள்

ஆசிரியர்: மு.வரதராசன்

Category இலக்கியம்
Publication பாரி நிலையம்
FormatPaper back
Pages 112
Weight100 grams
₹35.00 ₹31.50    You Save ₹3
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



வெறி நமக்குப் பிடிக்கக்கூடாது; மற்றவர்களுக்குப் பிடித்தால் பார்க்கலாம் - இப்படித்தான் சிறு பிள்ளைகள் எண்ணுகிறார்கள். சிறு பிள்ளைகள் மட்டும் அல்ல; உலகத்தில் உள்ள வளர்ந்த பிள்ளைகளாகிய பெரியவர்களும் இப்படியே எண்ணுகிறார்கள். ஒருவன் வெறி பிடித்து ஓடினால், அவனைக் காணும் சிறுவர்கள் தொடர்ந்து ஓடுகிறார்கள்; ஓடி மகிழ்கிறார்கள்; தற்காப்புக்காகக் கையில் கல் எடுத்துக்கொண்டு ஓடுகிறார்கள். சில வேளைகளில் அந்தக் கல்லை, தற்காப்புக்காக வைத்திருக்க வேண்டும் என்பதை மறந்து, வெறியன்மேல் விளையாட்டாக வீசி எறிகின்றார்கள். எப்படியும் மற்றவனுக்குப் பிடித்த வெறியில் சிறு பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி இருக்கின்றது. ஆனால், வளர்ந்த பிள்ளைகள் காணும் வெறி இப்படிப் பட்டது அல்ல. அங்கே வெறி பிடித்தவன் ஒருவன்; தொடர்ந்து பார்க்கின்றவர்கள் பல சிறு பிள்ளைகள். இங்கே வெறி பிடித்தவர்கள் பலர்; தொடர்ந்து பார்க்கின்றவர்கள் ஒருவர் இருவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மு.வரதராசன் :

இலக்கியம் :

பாரி நிலையம் :