அறிக அரிய தகவல்கள் (சுவையான தகவல்கள்)
ஆசிரியர்:
கே.எஸ்.சுப்ரமணி
விலை ரூ.45
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%28%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29?id=1201-5033-1617-8050
{1201-5033-1617-8050 [{புத்தகம் பற்றி உலக அரங்கில் முதன் முதலாக தமிழ் ஒலித்தது 2008-ஆம் ஆண்டில்தான். ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை அதிபர் ராஜபக்சே தமிழில் பேசினார். அப்பாவித் தமிழர்களை அதிக எண்ணிக்கையில் அழித்த இவர் தமிழில் பேசியது அதிசயமான உலக சாதனையாகும்.
<br/>தினமும் ஊக்கம் குறையாமல் பயிற்சி செய்தால் ஒரே ஒலிம்பிக்கில் எட்டுத் தங்கப்பதக்கங்களை அதுவும் ஏழு உலக சாதனைகளுடன் வெல்லமுடியும் என்று நிரூபித்தவர் அமெரிக்க நீச்சல் வீரரான மைக்கேல் பெல்ப்ஸ். இதை 2008-ஆம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கில் பெல்ப்ஸ் நிரூபித்துக் காட்டினார். இது மட்டுமா?
<br/>இந்திய வீராங்கனையான அஞ்சுபாபி ஜார்ஜின் தனிச் சிறப்பு என்ன? அனைவருடனும் அன்புடன் பழக எந்த நிற உடைகள் உடல் உறுப்புகளையும், உள்ளத்தையும் புதுப்பித்து சமாதானமாக வாழவைக்கும்? விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட அந்த நிற உடைகள் எவை? பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பாராட்டப்பட்ட முதல் திரைப்பட இயக்குநர் யார்? விண்வெளியில் நடந்த முதல் திருமணம் எது? இந்தியாவின் முதல் இரு திரைப்பட நடிகைகள் யார்? மினரல் வாட்டரில் மட்டுமே குளிக்கும் மக்கள் எந்த நாட்டில் வாழ்கின்றனர்? விஸ்வநாதன் ஆனந்தின் தனிச் சிறப்பு என்ன? கடமை உணர்வுடன் வாழத்தூண்டும் அரிய உணவுகள் என்னென்ன?
<br/>இது போன்ற சுவையான பொது அறிவுத் தகவல்களும், தன்னம்பிக்கையையும், வாழும் முறையையும் புதுப்பிக்கும் அரிய தகவல்களும் இந்த நூலில் உள்ளன. இந்த அரிய தகவல்களை எந்த அளவு நினைவில் வைத்துப் பயன்படுத்தினாலும் அனைத்து வயதினருக்கும் உறுதியாக வெற்றி உண்டு.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866