அறிஞர் பெர்னார்ட் ஷா

ஆசிரியர்: மு.வரதராசன்

Category வாழ்க்கை வரலாறு
Publication பாரி நிலையம்
FormatPaper Back
Pages 138
Weight150 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அறிஞர் பெர்னார்ட் ஷாவை நான் மதிப்பதற்குக் காரணம், வாழ்க்கைச் சிக்கல் எதுவாயினும் அதை மேம்போக்காகக் கண்டு மருந்திட்டுச் செல்லாமல், அதன் அடிப்படைக் காரணம் கண்டு திருத்தும் ஆற்றல் அவருடைய எழுத்துகளில் இருத்தலே ஆகும். அவரைப் பற்றித் தமிழில் ஒரு நூலும் இல்லையே என்று கூறி, ஒரு சிறு நூலேனும் எழுதுமாறு நண்பர்கள் வற்புறுத்தினார்கள். அவர்களின் தூண்டுதலால் முதல் பதிப்பு வெளியானது. முதல் பதிப்பு வெளியான போது அறிஞர் ஷா வாழ்ந்து வந்தார். இப்போதோ, அவர் இல்லை . முதல் பதிப்பில் இருக்கிறார்' என்று குறித்த இடங்களை 'இருந்தார்' என்று இப்போது திருத்த நேர்ந்தது. இவ்வாறே பல மாறுதல்கள் செய்யப்பட்டன. நூலும் இருமடங்காக விரிவுபெற்றது. கடல் போல் பரந்த பலதிறக் கருத்துகளைப் பற்பல நாடகங்களிலும் முகவுரைகளிலும் வேறு நூல்களிலும் எழுதிக் குவித்துச் சென்ற அறிஞரைப் பற்றி இந்தச் சிறு நூல் போதாது என்னும் குறையை நன்கு உணர்கிறேன். ஆயினும் இந்தச் சிறு முயற்சியும் ஓரளவு பயன்படும் ஆதலின் தமிழகம் ஏற்கும் என நம்புகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மு.வரதராசன் :

வாழ்க்கை வரலாறு :

பாரி நிலையம் :