அற்புத விடுகதைகள் 1001

ஆசிரியர்: ச.குமார்

Category பொது நூல்கள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaperback
Pages 190
ISBN978-93-83670-47-5
₹155.00 ₹150.35    You Save ₹4
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



"என்ன கதைவிடுறியா?" என்று கேட்கும் கேள்வியில் "நீ சொல்வதை நான் நம்பத் தயார் இல்லை” என்ற பொருள் தொனிக்கும், ஆனால் விடுகதைக்கு விடை சொல்வதென்றால் அதற்குரிய பொருத்தமான விடையைத் தேடிக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும். மூளைக்கு வேலை கொடுக்க வேண்டும். அப்போது சிதறிக் கிடக்கும் மனம் ஒரு நிலைப்படும். மனதை ஒரு நிலைப்படுத்தினாலே உடல்நிலை சீராகும். மனநிலை சீராகும். பலர் கூடியிருந்து ஒரு பொருள் குறித்த வினாவை எழுப்பி விடை சொல்லும் போது ஒரு கலகலப்பு தோன்றும். கற்பனை வளம் பெருகும். கற்பனையில்தானே நிஜவாழ்வின் அழுத்தங்கள், இறுக்கங்கள் கரைக்கப்படுகின்றன. கவலைகளிலிருந்து விடுபட இதுபோன்ற விடுகதை நூல்கள் தேவையானதே, "பூட்டும் வேண்டாம். சாவியும் வேண்டாம் தன்னாலே வாசல் மூடி, திறக்கும். அது என்ன?" என்று கேட்டால் பலவாறு யோசிக்கத் தோன்றும். விடை தெரிந்தவுடன் மூடியிருக்கும் வாசல் "வாய்" என்று சிரிப்பு ஓசையுடன் திறந்துவிடும். வாய் திறந்து சிரியுங்கள். நோய் பறந்து போய்விடும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ச.குமார் :

பொது நூல்கள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :