அலையும் கலையும்

ஆசிரியர்: ரா.பி.சேதுப்பிள்ளை

Category ஆய்வு நூல்கள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
Pages 120
Weight150 grams
₹60.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தமிழகத்தின் கடல் மாட்சியையும், கலை மாட்சியையும் ஒருவாறு விளக்கிக் காட்டும் நோக்கத்துடன் எழுந்தது இந்நூல். இதில் அடங்கிய இருபத்தொரு கட்டுரைகளுள் முதல் மூன்று கட்டுரைகளும் இலங்கை வானொலி நிலையப் பேச்சுகள். 'சென்னைக் கடற்கரை' கல்கித் தீபாவளி மலரில் வந்த கட்டுரை. ஆனந்தவிகடன் தீபாவளி மலரில் வெளியிடப்பட்டது. 'பரங்கியர் போன வழி', 'மேலைநாட்டு அறிஞரின் கலைத்தொண்டு' என்னும் கட்டுரை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் ஆய்வு மலரிலும், 'நான் கண்ட சோழவந்தான்' சுதேசமித்திரன் பொங்கல் மலரிலும் வெளிவந்தவை. 'கலைச்சொல்லாக்கம்' கோவையில் நிகழ்ந்த சென்னை மாநிலத் தமிழாசிரியர் மாநாட்டில் நிகழ்த்திய சொற்பொழிவின் சுருக்கம். உள்ளுறையில் உடுக்குறியிட்ட கட்டுரைகள் சென்னை வானொலி நிலையப் பேச்சுகள்.
இக்கட்டுரைகளையும், பேச்சுகளையும் இந்நூலில் சேர்த்துக் கொள்வதற்கு இசைவு தந்த நிலையங்களுக்கும், இவற்றைத் திரட்டி நூல் வடிவாக வெளியிடுவதற்கு இசைவு அளித்த சென்னைப் பல்கலைக் கழகத்திற்கும் என் மனமார்ந்த நன்றி உரியதாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ரா.பி.சேதுப்பிள்ளை :

ஆய்வு நூல்கள் :

கௌரா பதிப்பக குழுமம் :