அலை ஓசை

ஆசிரியர்: கல்கி

Category சரித்திரநாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatHard Bound
Pages 280
Weight950 grams
₹280.00 ₹224.00    You Save ₹56
(20% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



புத்தகங்களின் சக்தியைப் பற்றிப் பெரியோர்கள் எவ்வளவோ சொல்லியிருக்கிறார்கள். புத்தகங்கள் அலமாரிக்கு அலங்காரம் என்றும் கரங்களுக்குப் பூஷணம் என்றும் கூறியிருக்கிறார்கள், அனுபவ வைத்திய முறையில், புத்தகங்கள் உறக்கம் வராமைக்குச் சிறந்த மருந்து என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
சிலருக்குக் காப்பி அல்லது தேயிலைப் பானம் அருந்தினால் தூக்கம் போய்விடும். புத்தகத்தைக் கையில் எடுத்தால் தூக்கம் வந்து விடும், புத்தகத்தின் மகிமையைப் பற்றி வேறு என்ன சொல்ல வேண்டும்!
புத்தகங்களைச் சம்பாதிப்பதற்குச் சாதாரணமாக மூன்று வழிகள் உண்டு என்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. யாசகம் வாங்குதல், கடன் வாங்குதல், திருடுதல் ஆகியவை அந்த மூன்று வழிகளாகும். விலைக்கு வாங்குதல் என்னும் நாலாவது வழி ஒன்றும் இருக்கிறது. இவற்றில் நாலாவது வழியைக் கடைப்பிடிக்கும்படியான அவசியம் ரயில் பிரயாணத்தின் போது நம்மில் பலருக்கு ஏற்பட்டு விடுகிறது.
ரயில் பிரயாணத்தில் பலருக்குத் தூக்கம் சரியாக வருவதில்லை . மந்திரி காட்கில் போன்றவர்கள் பாக்கியசாலிகள், அவர்கள் ரயில் பிரயாணத்தின் போது நன்றாகத் தூங்குவது மட்டுமின்றித் திருட்டுக் கொடுக்கவும் செய்கிறார்கள். ஆனால் நம்மில் பலருக்கு ரயிலில் தூக்கம் வருவது கிடையாது. ரயில் ஆடி அசைந்து குலுக்கிப் போடுகிற போட்டில் வருகிற தூக்கமும் விரைந்து ஓடிப்போகிறது. ஆகையால் பொழுது போக்குகிறதற்கு ஏதேனும் புத்தகம் இருந்தால் நல்லது என்ற எண்ணம் உண்டாகிறது. இவ்வாறு புத்தகப் படிப்பின் வளர்ச்சிக்கு ரயில்வேக்கள் மிக்க உதவி செய்கின்றன. இதற்காகவே பெரிய ரயில்வே நிலையங்களில் புத்தகக் கடைகளும் வைத்திருக்கிறார்கள். புத்தகம் சம்பாதிக்கும் முறைகளில் முதல் மூன்று முறைகளும் ரயில் பிரயாணத்தின்போது அவ்வளவாக சௌகரியப்படுவதில்லை. நாலாவது முறையைத்தான் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கல்கி :

சரித்திரநாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :