அஷ்டாவக்ர மகாகீதை பாகம் - 3

ஆசிரியர்: ஓஷோ

Category ஆன்மிகம்
Publication கவிதா பதிப்பகம்
FormatPaperback
Pages 432
ISBN978-81-8345-486-5
Weight500 grams
₹350.00 ₹332.50    You Save ₹17
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



அஷ்டாவக்ர மகாகீதை என்று போற்றப்படும் இந்த அரிய தத்துவ ஆய்வு நூல் அஷ்டாவக்ர முனிவருக்கும் விதேக நாட்டு மன்னர் ஜனக மகாராஜாவிற்கும் இடையே நிகழ்ந்த ஞான உரையாடலை உள்ளடக்கியது. அஷ்டாவக்ரர் மொழியும் பேருண்மைகளையே ஜனகரும் எதிரொலிக்கிறார். ஆகவே இந்த உரையாடல் கேள்வி-பதில் முறையில் அமைந்திருக்கவில்லை . குருவும் சீடரும் ஒரே சத்தியத்தையே கூறுகின்றனர். அவரவர் பாணிதான் வேறு."எது எப்படி உள்ளதோ அதை அவ்வாறே அறிந்துகொள். எது உனக்குக் கிடைக்கிறதோ அதிலேயே திருப்தி கொள். அப்போது நீ உன் ஆத்ம மையத்திலேயே இருப்பாய். பிறகு, சுகத்தைத் தேடி அலைவதும் இல்லை. துன்பத்தில் துவண்டு வீழ்தலும் இல்லை. சுகமா-வருக; துக்கமா-வருக; நீ உன் வாழ்க்கைக்கு சாட்சி மாத்திரமே என்பதை உணர்வாய்; அவ்வாறு உணர்ந்ததும் நீ இருக்கும் இடமே சுவர்க்கமாகிவிடும். ஏனெனில் சாட்சி வாழ்க்கையே சுவர்க்க வாழ்க்கை ."- ஓஷோ .

அரசன் தன் அதிகாரிகள் பின்தொடர் நகர வாயிலுக்குச் சென்று காத்திருந்தான். துறவி வந்தார். அவரது கோலத்தைப் பார்த்து அரசன் ஆச்சரியமடைந்தான். அவரது முழங்கால்வரை சேறு அப்பியிருந்தது. அப்போது மழை காலம் இல்லை. நகரத்துக்கு வரும் பாதை வறண்டிருந்தது. மக்கள் தண்ணீருக்குத் தவித்துக் கொண்டிருந்தனர். பிறகு எப்படி முழங்காலைத் தொடுமளவு சேறு படரமுடிந்தது? ஆனால் அரசன் மற்றவர்களின் முன்னிலையில் அதுபற்றி விசாரிக்க விரும்பவில்லை. இருவரும் அரண்மனையை அடைந்து தனிமையில் பேசிக் கொண்டனர். அரசன் கேட்டான், “உங்கள் கால்களில் ஏன் சேறு படர்ந்திருக்கிறது?”

உங்கள் கருத்துக்களை பகிர :
ஓஷோ :

ஆன்மிகம் :

கவிதா பதிப்பகம் :