ஆடு வளர்ப்பு -லாபம் நிரந்தரம்

ஆசிரியர்: ஊரோடி வீரகுமார்

Category விவசாயம்
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaperback
Pages 112
ISBN978-81-8368-956-4
Weight150 grams
₹140.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சென்னையைச் சேர்ந்த ஒருவர் வித்தியாசமான ஒரு தொழிலில் இறங்கினார். பாண்டிச்சேரிக்கு அருகே 1 ஏக்கர் நிலம் வாங்கி, அதில் ஆடுகளை வளர்க்க ஆரம்பித்தார். சென்னை உள்பட பல பெரிய நகரங்களிலிருந்து வந்து நல்ல விலை கொடுத்து ஆடுகளை வாங்கிக்கொண்டு போனார்கள். ஐந்தே ஆண்டுகளில் அவர் செய்த முதலீடு பல மடங்கு பெருகியது. இந்தத் தொழிலில் இப்படி ஒரு லாபமா என்று வியந்தவர், சென்னையில் பார்த்த வேலையைக் கைகழுவிவிட்டு, நிரந்தரமாக பாண்டிக்கே சென்றுவிட்டார். இன்று அவரிடம் பல ஆயிரம் ஆடுகள் இருக்கின்றன. இந்த வெற்றிக் கதை ஒரு புதிய வாசலை நமக்கு திறந்துவைக்கிறது. திறம்பட செய்தால் யார் வேண்டுமானாலும் லட்சம் லட்சமாக லாபம் சம்பாதிக்கலாம் என்னும் கனவை இந்தச் சம்பவம் நமக்குள் விதைக்கிறது. ஆடு வளர்ப்பு பற்றி எதுவும் தெரியாதே என்னும் கவலை வேண்டாம்.எத்தனை வகையான ஆடுகள் உள்ளன, கறிக்கு எந்த ஆட்டை வளர்க்கலாம், மிகுதியாகப் பால் கொடுக்கும் ஆடு எது, ஆடுகளுக்கு என்ன சாப்பிடக் கொடுக்கவேண்டும், எந்த ஆட்டுக்கு என்ன நோய் வரும், அதற்கு என்ன மருந்து உள்ளிட்ட அனைத்து அடிப் படைத் தகவல்களையும் கொண்டுள்ளது இந்நூல். தவிரவும், ஒரு புதிய, வெற்றிகரமான தொழில் வாய்ப்பை உங்களுக்கு இந்நூல் உருவாக்கிக்கொடுக்கிறது. Note: Short print run. Will be shipped from 7 - 10 days.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஊரோடி வீரகுமார் :

விவசாயம் :

கிழக்கு பதிப்பகம் :