ஆடு - மாடு வளர்ப்பு

ஆசிரியர்: ஆசிரியர் குழு

Category சுயமுன்னேற்றம்
Publication விகடன் பிரசுரம்
FormatPaperback
Pages 160
ISBN978-81-8476-327-0
Weight200 grams
₹165.00 ₹160.05    You Save ₹4
(3% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஆடு மாடுகளை வளர்ப்பது என்பது ஆதிகாலத்திலிருந்து மனித சமுதாயத்துக்குப் பயனளிக்கும் ஒன்றாகவே கருதப்பட்டு வருகிறது. எத்தனையோ விவசாயக் குடும்பங்களுக்கு ஆடு மாடுகள்தான் சோறு போடுகின்றன. இன்று பல குழந்தைகள், ஏன் பெரியவர்கள்கூட பசுவின் பால் குடித்துதான் வளர்கிறார்கள், வாழ்கிறார்கள்.
விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்கள் புகுந்துவிட்டாலும், விவசாயத் தொழில்களுக்கு ஆடு மாடுகள் ஏராளமாக உதவி புரிகின்றன. மாடுகள் தங்கள் உழைப்பைத் தருவதோடு இறைச்சி, பால், சாணம், கோமியம், கொம்பு, தோல் என அனைத்தையும் தந்து உதவுகின்றன. ஆடு வளர்ப்பிலும் அதேபோலதான். ஆட்டின் இறைச்சி, தோல், பால், புழுக்கை என அனைத்தும் பணமாகிறது.
கறவை மாடுகள், உழவு மாடுகள், எருமை மாடுகள், காளை மாடுகள் போன்ற மாட்டு இனங்களை வளர்க்கவும், அவற்றுக்குத் தேவையான புல் வகைகள், தீவனங்கள், பராமரிப்பு... என விளக்கங்களைத் தருவதோடு, மாடுகளை வாங்கவும் விற்கவும் சந்தைகள், வங்கிக்கடன், லாபகணக்குகள் என அத்தனை விவரங்களையும் தருகிறது இந்த நூல்.ஆடு-மாடு வளர்ப்பு என்பது ஒரு லாபம் தரும் தொழிலாகவே மாறிவிட்டது. விவசாயிகள் மட்டுமல்லாமல் யார் வேண்டுமானாலும் ஆடு மாடுகளை வளர்க்கலாம் என்ற அளவுக்கு, கால்நடை பராமரிப்புத் துறையும், விவசாயத் துறையும் மாறிவரும் வளர்ப்பு முறைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வருகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆசிரியர் குழு :

சுயமுன்னேற்றம் :

விகடன் பிரசுரம் :