ஆணிவேர்
ஆசிரியர்:
குணா
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D?id=1406-8289-5995-0598
{1406-8289-5995-0598 [{புத்தகம் பற்றி வள்ளுவத்தின் வீழ்ச்சி என்ற என்னுடைய நூல் வெளிவந்து சின்னாள் கழித்துத் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலிருந்து அழைப்புகள் வந்தன. அழைத்தவர்கள், அவர்களுடைய வள்ளுவர் சாதியைப்பற்றி நூல் எழுதியிருப்பதால், என்னைப் பாராட்டி மதிப்புச் செய்ய விரும்பு வதாகக் கூறினர். இந்த அழைப்புகளைக் கண்டு சற்று அரண்ட நான், சாதி வழியிலான அவர்களின் அழைப்பை ஏற்கவியலாதெனக் கூறி விட்டேன்.வடுகர்கள் தமிழகத்தின்மீது தொடுத்த படையெடுப்புகளே தமிழரினத்தின் வீழ்ச்சிக்கு வழிகோலின; அவர்கள் ஊதிப் பெருகச் செய்த சாதி முரண்பாடுகளே தமிழர்களிடம் சாதிக் காழ்ப்புகளாய்க் காழ்த்துக் கிடக்கின்றன; இந் நிலையில், தமிழர் தேசிய ஓர்மையை வளர்ப்பதன் ஊடாகத் தமிழ்ச் சாதிகளுக்கு இடையிலான அகமுரண் பாடுகள் பகை முரண்பாடுகளாகி விடாமல் தடுக்கவியலும் என்ற நோக்கிலேயே மறையர், மள்ளர், சான்றோர், பரதவர் ஆகிய நான்கு அடிப்படைத் தமிழ்ச் சாதிகளின் வரலாறுகளை எழுத எண்ணினேன். அந்த நோக்கில், வள்ளுவப் பார்ப்பாரியம் என்னும் நூலை எழுதி வெள்ளோட்டம் விட்டேன். ஆயினும், சாதி வழியில் எந்தமிழர்களை ஆற்றுப்படுத்த வேண்டுமென்று நான் என்றுமே எண்ணியதில்லை; எண்ணவும் துணிய மாட்டேன், சாதி வழியில் தமிழர்கள் அடித்துக் கொண்டு சாவதைத் தடுப்பதற்காக அவர்களைக் கெடுத்த இனப்பகை இதுதான் என்று காட்டவேண்டுமென்பதே எனது நோக்கமாயிருந்தது.
<br/></br>} {பதிப்புரை தொல்காப்பியத்தில் கேள்வி என்ற சொல்லாட்சியே இல்லை, கேள்வி என்பது தமிழ் நான்மறையையே குறிக்கும். தமிழில் இயற்றப்பட்ட மந்திரப் பாடல்கள் அடங்கிய நான்மறை, தொல்காப் பியரின் காலத்தில் தொகுக்கப்பட்டிருக்கவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. ஐந்திரத்தைபஞ்சாங்கத்தைப் பார்த்துக் காலத்தைக் கணித்துக் கூறியவர்களையே பார்ப்பார்' என்றனராயின், காலத்தைக் கணித்துச் சொல்வதையே தொழிலாகக் கொண்டிருந்த வள்ளுவர் களைக் குறிப்பதாகவே அது முதலில் இருந்திருக்க வேண்டும். இவர் கள்தாம் மூலப்பார்ப்பார்கள். ஆசான் எனப்பட்ட பூசகன் (மறையோன் புரோகிதன்), பெருங் கணியன்வள்ளுவன், அமைச்சன், படைத்தலைவன்,தூதன் ஆகிய ஐவர் அடங்கிய ஐம்பேராயம் என்ற குழு நாடாளும் அரசனுக்கு ஏடல் உரைக்கும் குழுவாகத் தொன்றுதொட்டு இருந்தது. இவர்களில், முதலில் கூறிய ஆசானுக்கும் வள்ளுவனுக்கும் இடையில் தோன்றிய அதிகாரப் போட்டியும் அகந்தையும் அவர்களுக்கு இடையிலான உறவைப் பகையாக்கியது. இந்தப் பகையால் அன்றைய மறையோன் வள்ளுவனைச் சூழ்ச்சியால் வீழ்த்தினான். அதாவது, பூசாரி வென் றான்; கணியன் தோற்றான்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866