ஆதிசங்கரரின் பஜ கோவிந்தம்

ஆசிரியர்: கவிஞர் கண்ணதாசன்

Category ஆன்மிகம்
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatPaper back
Pages 72
ISBN978-81-8402-025-0
Weight100 grams
₹45.00 ₹42.75    You Save ₹2
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



எட்டாம் நூற்றாண்டில் எளிமையடைந்துவிட்ட மொழியில், தாளத்தோடு நான்கு நான்கு வரிகளாக எழுதப்பட்டது 'பஜ கோவிந்தம்',
சித்தர்கள் பாடிய தத்துவ ஞானம் போன்றதே இதுவும். வடமொழி அறியாத நான், ஆதிசங்கரரின் பஜ கோவிந்தத்துக்கு பலபேர் எழுதிய பாஷ்யங்களைப் பார்த்து, 'ஆசை வயப்பட்டு' இந்தச் செய்யுளை இயற்றினேன். 'காசில் கொற்றத்து ராமன் கதையை ஆசை பற்றி அறையலுற்றேன்' என்றான் கம்ப நாடான். நானும் ஆசையினாலேயே இதை எழுதியுள்ளேன். இந்த ஆசை ஈஸ்வர ஆசை, ஆகையால் லௌகீக ஆசையில் உள்ள துயரம் இதில் இல்லை . மாறாக, இது நிரந்தர நிம்மதியை வழங்கும் ஆசை. எந்த அளவுக்கு இதனை நான் சரிவரச்செய்திருக்கிறேன் என்பது, ஆதி சங்கரரின் ஆன்மாவுக்கும், ஈஸ்வரனுக்கும் மட்டுமே புரியக்கூடிய ஒன்று. இதனை எழுதும்படி என்னைத் தூண்டியது இறைவன் ஏற்படுத்திக் கொடுத்த ஒரு சிறு சந்தர்ப்பமே. 'மலையாள மொழியில் எடுக்கப்படும் 'ஆதி சங்கரர்' என்ற படத்துக்கு பாடல் எழுதுவதற்காக என்னை அழைத்தபோது, இந்தப் பஜகோவிந்தம் பாடல்களை அந்தப் படத்தில் நான் கேட்டேன். இந்தப் பாடல்களைப் பதிவு செய்து அல்லும் பகலும் கேட்டுக்கொண்டே இருந்தேன். விளைவு இந்த நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிஞர் கண்ணதாசன் :

ஆன்மிகம் :

கண்ணதாசன் பதிப்பகம் :