ஆனந்தம் பண்டிதர்

ஆசிரியர்: கோ.ரகுபதி

Category உடல்நலம், மருத்துவம்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper back
Pages N/A
Weight300 grams
₹225.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



" ஆயுர்வேத–அலோபதி மருத்துவ முறைகளின் மேலாதிக்கத்தால், நம் பாரம்பரியமிக்க சித்த மருத்துவம் அழிந்துவிடாமல் காத்திட தொடர்ந்து செயல்பட்ட ஆனந்தம்பண்டிதரின் சமூகப் பணிகளின் தொகுப்பிது. பரம்பரையாக மருத்துவம் செய்துவந்த குடும்பத்தில் பிறந்த ஆனந்தம்பண்டிதர் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களோடு, தமிழ் மருத்துவ நூல்களையும் படித்தவர். 1928-ம் ஆண்டு தமிழ் சித்த மருத்துவத்தைப் பாதுகாக்கும் போராட்டத்துக்கு உறுதுணையாக ‘மருத்துவன்’ எனும் மாத இதழை அவர் தொடங்கினார்.

மருத்துவப் பணிகளோடு நின்றுவிடாமல், பெண் விடுதலை, தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு போன்றவற்றுக்கான போராட்டங்களிலும் தன்னை முன்னிறுத்திக்கொண்ட ஆனந்தம்பண்டிதர் பற்றி அறிந்துகொள்ள வேண்டிய வரலாற்றுத் தரவுகள் இந்நூலில் உள்ளன. சித்த மருத்துவம், சமூக மருத்துவம், நோய்க் கிடங்கொடேல், மருத்துவன், பண்டிதருக்குப் பாராட்டு என 5 தலைப்புகளின் கீழ் ஆனந்தம்பண்டிதரின் பணிகளைப் பெருமுயற்சியெடுத்து தொகுத்துத் தந்துள்ள பதிப்பாசிரியரின் பணி பாராட்டுக்குரியது. வரலாற்றில் மறைக்கப்பட்ட ஆளுமைகளைப் பற்றி இது போன்ற புத்தகங்கள் வெளியாவது நம் காலத்தின் தேவை."

- தி இந்து.

உங்கள் கருத்துக்களை பகிர :
கோ.ரகுபதி :

உடல்நலம், மருத்துவம் :

காலச்சுவடு பதிப்பகம் :