ஆறாம் திணை (பாகம்-2)

ஆசிரியர்: கு.சிவராமன்

Category உடல்நலம், மருத்துவம்
Publication விகடன் பிரசுரம்
FormatPaperback
Pages 183
ISBN978-81-8476-594-6
Weight50 grams
₹170.00 ₹144.50    You Save ₹25
(15% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஆறாம் திணை முதல் பாகம் ஏற்கெனவே புத்தகமாக வெளியிடப்பட்டு, அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் இது. தற்காலத்தில் நாம் உண்ணும் உணவே நோய்களை உண்டாக்குகிறது. அதைத் தவிர்த்து நம் பாரம்பரிய உணவுகளைக் கொஞ்சம் அக்கறையுடன் உண்டாலே ஏராளமான நோய்கள் வராமல் காக்கலாம் என்பதை நூல் ஆசிரியர் மருத்துவர் கு.சிவராமன் முதல் பாகத்திலிருந்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
தற்காலத்தில் பொருத்தம் இல்லாத தயாரிப்பில் உருவான 'பஃப் செய்யப்பட்ட பாக்கெட் நொறுக்குச் சிற்றுண்டிகளான, சிப்ஸ், கார வகைகள், ஏரியேட்டட் டிரிங்க்ஸ் ஆகியவற்றை உண்ணவே இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள் எல்லோரும் விரும்புகின்றனர். இவற்றால் உடலுக்கும் பலம் ஏற்படுவதில்லை. இவை நோயையும் வரவழைக்கின்றன. நாம் எதை உண்ண வேண்டுமோ அதை உண்ணாமல் உண்ணத் தகாததை உண்கிறோம். இந்த விஷயத்தைப் பற்றிய தெளிவு இன்மையே இதற்கெல்லாம் காரணம். மேலும், வியாபார நோக்கில் அதிக விளம்பரங்கள் செய்து வெளிநாட்டு நிறுவனங்கள் இதை நம் மேல் திணிக்கின்றன. இதைத் தெள்ளத் தெளிவாக பொட்டில் அடித்தாற்போல விளக்குகிறார் நூல் ஆசிரியர். கூடவே பாரம்பரிய உணவுகளை சுவையாக, எந்தெந்த மாதிரி தயாரிக்கலாம், அதன் மருத்துவ குணம் போன்றவற்றையும் எழுதியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கு.சிவராமன் :

உடல்நலம், மருத்துவம் :

விகடன் பிரசுரம் :