இட்லர்

ஆசிரியர்: வெ.சாமிநாத சர்மா

Category அரசியல்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaper Back
Pages 272
ISBN978-93-87573-29-1
Weight250 grams
₹200.00 ₹190.00    You Save ₹10
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866'பிரபஞ்ச ஜோதி'யின் மூன்றாவது சுடரில் ஒளிர்கிறவன், ஜெர்மனியில் ‘மூன்றாவது ஏகாதிபத்தியத்தை ஸ்தாபித் திருக்கிறான். இவன் இந்த ஏகாதிபத்தியக் கட்டிடத்தை ஒழுங்காக அமைத்துக் காட்ட, நான்கு வருஷ கால தவணை கேட்டான். அந்தக் காலம் 1937-ஆம் வருஷம் மார்ச் மாதத்தோடு முடிகிறது. ஆதலின் ஹிட்லரின் ஆட்சி முறையைப் பற்றி இப்பொழுது ஒன்றுந் தீர்ப்புக் கூறுவதற்கில்லை .
"கடவுளே! யுத்தத்தினின்று காப்பாற்றியது போதும்; சமாதானத்தினின்று எங்களைக் காப்பாற்றுவாய்” என்று ஓர் ஆசிரியன் பிரார்த்தனை செய்தான். ஐரோப்பா வின் இப்பொழுதைய நிலைமை இப்படித்தான் இருக் கிறது. மகா நாடுகள் கூடுவதற்குக் கணக்கில்லை . “இது மகா நாடுகள் யுகம் போலிருக்கிறது” என்று பேசினான் ஹிட்லர் கூட. உடன்படிக்கைகளுக்காகச் செலவழிக்கப் படும் தாளும் மையும், வாளும் கையுமாகவே உருவெடுக் கின்றன. உதட்டிலே உறவு உள்ளத்திலே பகை.
தங்கள் பொறுப்பைக் கழித்து, குற்றத்தை மறைத்துக் கொள்ள விரும்பும் பலர், ஹிட்லர்தான் இந்த நிலைமைக் கெல்லாம் காரணம் என்று கூறுகின்றனர். இந்தத் தீர்ப்பு சரியாகவு மிருக்கலாம்; தவறாகவு மிருக்கலாம். ஆனால், தீர்ப்புக் கூறுவது இந்த நூலின் நோக்கமல்ல. ஜெர்மனியின் கட்சியை, ஹிட்லருடைய நோக்கத்தை எடுத்துரைப்பது தான். இதனால் ஹிட்லரின் கொள்கைகளை அங்கீகரிப் பதாக ஆகாது. அவனைக் குறை கூறுவதாகவும் ஆகாது.

உங்கள் கருத்துக்களை பகிர :
வெ.சாமிநாத சர்மா :

அரசியல் :

கௌரா பதிப்பக குழுமம் :