இட்லி தோசைக்கு ஏற்ற சூப்பர் சைடிஷ்

ஆசிரியர்: பிரேமலதா

Category சமையல்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 48
Weight50 grams
₹20.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866“தேங்காய் சட்னி, தக்காளி சட்னி இதை விட்டால் உனக்கு வேறு எதுவும் தெரியாதா?" இது அநேகமாக எல்லா வீடுகளிலும் காலை நேரம் ஒலிக்கின்ற சுப்ரபாதம். ஆரம்பத்தில் எங்கள் வீட்டிலும் தினமும் கேட்டுக் கொண்டிருந்தது.
இட்லிக்குப் பேர் போன மதுரையில் என் புகுந்த வீடு அமைந்தது. என் மாமியாரின் மல்லிகைப்பூ போன்ற இட்லிக்கும், விதவிதமான சட்னி வகைகளுக்கும் நான் அடிமை. அப்புறமென்ன! விதவிதமான சட்னி வகைகளை என் மாமியார் எனக்குத் தாயன்போடு கற்றுத் தந்தார்கள். எல்லோரும் பயன்பெறட்டுமே என எண்ணி இதை சிறு புத்தகமாகத் தொகுத்திருக்கின்றேன். நீங்களும் தினம் ஒரு சட்னி செய்து குடும்பத்தினரை அசத்துங்க!
இந்நூலினை எழுத என்னை ஊக்குவித்த என் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி. மிகவும் அழகாக இந்நூலை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கு என் மனமார்ந்த நன்றி.
கருவிலே என்னைச் சுமந்த என்னுயிர் அம்மாவுக்கும், பாசத்தோடு என்னை வளர்த்த எனதருமை அத்தைக்கும் இந்நூல் சமர்ப்பணம்.

அன்புடன்
பிரேமலதா பாண்டியன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சமையல் :

சங்கர் பதிப்பகம் :