இதய ரோஜா

ஆசிரியர்: இந்து சுந்தரேசன்

Category சரித்திரநாவல்கள்
Publication வானதி பதிப்பகம்
FormatHardcover
Pages 740
Weight900 grams
₹350.00 ₹332.50    You Save ₹17
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசக்ரவர்த்தி ஜஹாங்கீருக்கும், மெஹ்ருன்னிஸாவிற்கும் இடையே இருந்த காதல், " இருபதாவது இல்லத்தரசி " என்ற முதல் புத்தகத்தில் ஆரம்பித்து, இந்த " இதய ரோஜா " என்ற சுவாரசியமான இரண்டாவது நாவலிலும் தொடர்கிறது. ஜஹாங்கீரின் அந்தப்புரத்தில், அவரது இருபதாவதும், கடைசியுமான மனைவியாக, பர்ஷியாவிலிருந்து அகதியாக இந்தியா விற்கு வந்த கியாஸ்பெக்கின் அழகிய மகளான மெஹ்ருன்னிஸா, தனது 34வது வயதில், அடியெடுத்து வைக்கிறாள். ஜஹாங்கீரின் இந்தத் திருமணம் காதலுக்காகவே செய்துகொள்ளப்பட்டது. மெஹருன்னிஸா, அவர்கள் எதிர்காலத்தையே அடக்கி ஆள் முடியுமோ என முகலாயப் பேரவை அங்கத்தினர்களுக்கு அச்சம் உண்டாகிறது. உண்மையும் அதுவே.
- வெகு சீக்கிரத்திலேயே முகலாய சாம்ராஜ்யத்தில் மிகுந்த செல்வாக்கும், அதிகாரமும் உடையவளாகவும், அந்தப்புரத்தில் அவள் வருவதைத் தடுக்க பெரிய அளவு முயற்சி செய்த, ஜஹாங்கீரின் பாட்ஷா பேகமான ஜகத்கோசினிக்கு ஒரு சவாலாகவும், அவள் ஆகிறாள். முகத்திரைக்குப் பின்னிருந்தே அவள் சுமார் 18 வருட காலம் சாம்ராஜ்யத்தை ஆட்சி புரிகிறாள். அவள் தந்தை கியாஸ், சகோதரன் அபுல் மற்றும் இளவரசன் குர்ரம் இவர்களுடன் கூட்டணியாக இருந்து, பின்னர் அதில் பிளவும் ஏற்படுகிறது. தான் விரும்பியதை அடைய, தன் மகள் லாட்லியின் வாழ்க்கையையே பணயமாக வைக்கக் கூடத் தயாராகிறாள். ஆனால் அவளுக்கு இத்தனை சக்தியை, செல்வாக்கைக் கொடுத்த மனிதனின் அன்பை, அளவற்ற காதலை அவள் கடைசி வரை ! இழக்கவேயில்லை .
இது " இருபதாவது இல்லத்தரசி” என்ற சரித்திர நாவலின் தொடர் நாவலாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சரித்திரநாவல்கள் :

வானதி பதிப்பகம் :