இத்தாலி மொழியை இலகுவாகக் கற்றுக்கொள்ளுங்கள்
ஆசிரியர்:
கே.ஜெகன்
விலை ரூ.90
https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1336-0186-8429-0834
{1336-0186-8429-0834 [{புத்தகம் பற்றி மொழி என்பது ஓர் இனத்தின் அடையாளம் என்பதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அது ஒரு இனத்தின் தொடர்பு மொழியாகவும் ஊடக மொழியாகவும் பயன்படும் சக்தி. இன்று உலகமெங்கும் அகதிகளாக பரந்து வாழும் தமிழ் மக்களால் பல அகராதிகள் வெளியாகி உள்ளன என்பது தமிழுக்குக் கிடைத்த மகத்தான வெற்றி என்றே நான் கருதுகின்றேன். ஆனால் தமிழுக்கும் இத்தாலிக்குமென அகராதிகள் என்பது மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன.

மொழி தேவை புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொரு இனத்துக்கும் கட்டாயத் தேவை. இத்தேவைகளைப் புரிந்து கொண்ட பொது நிறுவனங்கள், சங்கங்கள் என பல்வேறுபட்ட அமைப்புக்களால் இப்படியான அகராதிகள் வெளியிடப்படுகின்றன. கூட்டு முயற்சியால் வெளியிடப்படும் அகராதிகளுக்கும் தனியொருவரது முயற்சியால் வெளியிடப்படும் அகராதிக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும். இருந்தாலும்கூட என்னுடைய இந்த கன்னி முயற்சி கூட ஒரு கூட்டு முயற்சிக்கு ஒப்பானதாகவே நான் கருதுகின்றேன்.

புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் எமக்கு மொழியை நன்றாகப் புரிந்துகொள்ளுதல் என்பது

மிகவும் சிரமமாகவே இருக்கும். இந்த சிரமத்தை போக்கிக் கொள்வதற்காகத்தான் சில ஆங்கில இத்தாலி - அகராதிகளின் உதவியுடன் “இத்தாலி மொழியை - இலகுவாக கற்றுக் கொள்ளுங்கள்” எனும் நூலாகும். இந்த நூல் வெளிவர உதவிய நெஞ்சங்களுக்கும் இந்த நூலை வெளியிட்டு வைக்கும் மணிமேகலைப் பிரசுரத்துக்கும் இந்த அகராதியை கையில் வைத்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இதில் ஏற்படும் தவறுகள் திருத்தங்களை மன்னித்து அதை எம் கவனத்துக்குக் கொண்டு வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் நன்றி கூறுகிறேன்.

இப்படிக்கு

என்றும் அன்புடன் .

க. ஜெகன்

போன் : 3339817073

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866