இந்தியத்தேசியமும் திராவிடத்தேசியமும்

ஆசிரியர்: குணா

Category கட்டுரைகள்
Publication குணாவிய அறக்கட்டளை
FormatHardbound
Pages 544
Weight800 grams
₹500.00 ₹450.00    You Save ₹50
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



1983ஆம் ஆண்டின் முதற்பாதியில் எழுதி முடித்து 1985 சூன் திங்களில் வெளிவந்த இந்தியத் தேசியமும் திரவிடத் தேசியமும் எனும் நூலின் இரண்டாம் பதிப்புத்தான் இது. எண்ணிலா அச்சுப் பிழைகளோடு வெளிவந்த நூலை செப்பமுறத் திருத்தி மறுபதிப்பாக உங்கள் முன் படைக்கிறேன்.
ஈ. வெ. இராமசாமி நாயக்கரின் நூல்களை ஆழ்ந்து படிக்க தொடங்கியிருந்த காலம் அது. அவரது நிழலுருவை வகைதொகை யின்றி மண்ணுக்கும் விண்ணுக்குமாக நீட்டித் தமிழர் இனத்தையே மீட்க வந்த ஒரு தனிப் பேராளுமை அவரெனத் திராவிட இயக்கத்தவர் வித்தை காட்டிவந்ததை நம்பியதால், தமிழகத்தில் முதலாளியப் புரட் சிக்கு வித்திட்டவர் அவரேயெனும் தவறான கருத்து எனக்குள்ளும் பதிந்துவிட்டிருந்த அந்தக் காலத்தில் எழுதப்பட்ட நூல் இது. அத னால், ஈ. வெ. இராமசாமி நாயக்கரைப்பற்றிச் சற்று உயர்வாகவே எழுதிவிட்டேன். 1960ஆம் ஆண்டு தொடங்கி இடங்கை (அதாவது, மார்க்சியப்) பொதுவுடைமைக் கட்சியிலிருந்து விரட்டப்பட்டுத் 'தீவிர மார்க்சியலெனினியக் குழுக்களோடு உறவாடிய காலம் வரையிலான இருபதாண்டுகளில் பொதுவுடைமையரோடு மட்டுமே பழகி வந்த நிலை மாறி, திராவிடர் கழகத்தார் போன்ற பிறரோடும் பழக நேர்ந்தது ஒரு தனிப் பட்டறிவு.
'சாதியொழிப்புப்பற்றி வாய் கிழியப் பேசிவந்த திராவிடர் கழகத்தினர் எவ்வளவு பெரிய சாதிவெறியர்கள் என்பதைக் கண்கூடாகப் பட்டறிந்த காலம் அது. மேலும், திராவிடர் கழகத்தவர் பெரும்பாலும் தெலுங்கராயிருந்தது வேறு பெரிய திகைப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகுதான், 'திராவிடம்' என்பது தமிழரினத்தைக் கருவறுக்க வந்த வந்தேறிக் கருத்தியல் என்பது விளங்கியது.அதனால்தான், இந்நூலின் இரண்டாம் பதிப்பின் பிற்பகுதியை ஏறத்தாழ முற்றிலும் மாற்றியும் திருத்தியும் விரித்தும் எழுத வேண்டிவந்தது.

உங்கள் கருத்துக்களை பகிர :
குணா :

கட்டுரைகள் :

குணாவிய அறக்கட்டளை :