இந்தியாவில் சாதிகள்
₹200.00 ₹194.00 (3% OFF)
இந்தியாவில் சாதிகள்
₹30.00 ₹29.10 (3% OFF)

இந்தியாவில் சாதிகள்

ஆசிரியர்: டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர்

Category கட்டுரைகள்
Publication எதிர் வெளியீடு
FormatPaperback
Pages 143
ISBN978-93-84646-56-1
Weight200 grams
₹150.00 ₹145.50    You Save ₹4
(3% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சாதிகளின் அமைப்பில் ஒரு சாதியின் பொதுவான அமைப்பியக்கம் இதுவே என நான் கருதுகின்றேன். தற்போது நாம் உயர்வான பொது நுணுக்கங்களை விடுத்து இந்து சமூகத்திலுள்ள சாதிகளின் அமைப்பியக்கத்தை ஆராய்வோமாக. பழமையை ஆய்ந்து தெளிவாக்க முயல்பவர்களின் பாதை கரடுமுரடானது; படுகுழிகள் நிறைந்தது. இந்தியாவில் சாதி மிகத் தொன்மையான நிறுவனம்; அதை அறிவதற்கு நம்பத்தக்க சான்றுகளோ எழுதப்பட்ட பதிவேடுகளோ இல்லாத நிலையில், அதுவும் உலகே மாயம் என்ற கருத்தும், வரலாற்றை எழுதி வைப்பது மடமை என்ற எண்ணமும் உள்ள இந்துக்கள் தொடர்புடைய வகையில் ஆய்வு மேலும் கடினமானது. வரலாறு நெடுங்காலமாக எழுதப்படாமல் இருந்தபோதிலும் சாதி அமைப்பு மிகத்தொன்மையானது என அறிய முடிகின்றது. பழம்பொருட்களின் கற்படிமங்கள் (fossils) தம் வரலாற்றைப் புலப்படுத்துவதுபோல, பழக்கவழக்கங்களும் நெறிமுறைகளும் எழுதப்படாதவையாயினும் சமூக அமைப்புகளில் இவை உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இதை மனதில் கொண்டு கூடுதலான ஆண், கூடுதலான பெண் ஆகியோராக எழுந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்துக்கள் மேற்கொண்ட வழியை நாம் ஆய்ந்தால் நம் முயற்சிக்குத் தக்க பயன் கிடைக்கும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் :

கட்டுரைகள் :

எதிர் வெளியீடு :