இந்தியாவில் சாதிகள்
₹200.00 ₹194.00 (3% OFF)
இந்தியாவில் சாதிகள்
₹30.00 ₹29.10 (3% OFF)

இந்தியாவில் சாதிகள்

ஆசிரியர்: டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர்

Category கட்டுரைகள்
Publication எதிர் வெளியீடு
FormatPaper Back
Pages 144
ISBN978-93-84646-56-1
Weight200 grams
₹120.00 ₹116.40    You Save ₹3
(3% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



உள்ளூர், நாடு மற்றும் உலகளாவிய அளவில் மனிதர்களின் நாகரிக வளர்ச்சியின் தொகுப்பாக விளங்கும் காட்சிப் பொருட்களை நாம் கண்கூடாகப் பார்த்திருப்போம் எனத் துணிந்துரைப்பேன். ஆயின், மாந்தரின் நிறுவனங்கள் (Human Institutions) என்பவற்றை வெளிப்படுத்தக் கூடியனவும் உள்ளன என்னும் கருத்தைச் சிலரே ஏற்கக்கூடும். மாந்தரின் நிறுவனங்களை வெளிப்படுத்திக் காட்டுவது என்பது வினோதமானதொரு கருத்தே சிலர் இதனை முரட்டுத்தனமான கருத்தென்றும் கூறலாம். எனினும், மானுடவியல் ஆய்வில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் என்ற வகையில் உங்களுக்கு இந்தக் கருத்து புதுமையானதாகஇருக்காது. இருக்கலாகாது எனக் கருதுகின்றேன். எப்படியும் இந்தக் கருத்து புதியதாக இருக்கலாகாது.
நீங்கள் யாவரும் பாம்ப்பியின் (Pompii) சிதைவுகள் போன்ற சில வரலாற்றுச் சின்னங்களைப் பார்த்திருப்பீர்கள். இவற்றின் தொன்மைச் சிறப்பையும் வரலாற்றையும் விளக்கியுரைப்பதற்கென்று பணியாற்றும் வழிகாட்டிகளின் வருணனைகளை வியந்து கேட்டிருப்பீர்கள். என் கருத்துப்படி மானுடவியல் மாணவர்களும் ஒரு வகையில் இந்த வழி காட்டிகளைப் போன்றவர்களே என்பேன். அவர்களைப் போன்றே சமூக நிறுவனங்களை விளக்கியுரைப்பதற்குத் தம்மால் முடிந்த அளவு தம் சொந்த விருப்பு வெறுப்புகளைக் கடந்து அதேவேளையில் மிகுந்த ஆர்வத்தோடும் பொறுப்போடும் அவற்றின் தோற்றத்தையும் செயற்பாடுகளையும் இவர்கள் ஆய்வு செய்கின்றனர்.


உங்கள் கருத்துக்களை பகிர :
டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் :

கட்டுரைகள் :

எதிர் வெளியீடு :