இந்து தர்மம்
ஆசிரியர்:
சோ
விலை ரூ.190
https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D?id=1088-7319-9290-2748
{1088-7319-9290-2748 [{புத்தகம் பற்றி வேதங்களின் சாரம், உபநிஷத்துக்களின் ஆழ்ந்த சிந்தனை, புராணங்களின் புனிதமானகருத்துக்கள், பக்தி மார்கத்தின் சிறப்பு, ஞான மார்க்கத்தின் மேன்மை, நமது கலாச்சாரத்தில் ஊன்றிவிட்ட நன்னெறிகள், மனிதர்களின் கடமைகள், மகான்களின் உயர்வு... என்று பல அரிய விஷயங்கள் காஞ்சி மஹா ஸ்வாமிகள் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் அருள் உரைகளில் கொட்டிக் கிடக்கின்றன. ஸ்ரீ ரா. கணபதி தொகுத்து, வானதி பதிப்பகத்தார் வெளியிட்ட ‘தெய்வத்தின் குரல்' ஆறு புத்தகங்களில் சுமார் 5000 பக்கங்களில், மஹா ஸ்வாமிகளின் பேச்சுக்களும், உபந்யாஸங்களும் விரிவாகத் தரப்பட்டிருக்கின்றன. ஸ்ரீ ரா. கணபதியும் வானதி பதிப்பக உரிமையாளர் ஸ்ரீ திருநாவுக்கரசும் நமது சமூகத்திற்கு ஆற்றியுள்ள பெரும்பணி இது.
<br/> அந்த ஆறு வால்யூம்களைப் படிக்க வாய்ப்பில்லாதவர் களுக்காக, அந்த 5000 பக்கங்களில் உள்ள கருத்துக்களின் சுருக்கத்தை இந்த 256 பக்கங்களில் தந்திருக்கிறோம். இப்படிச் சுருக்கமாகத் தருவது, 'முழுமையாகப் படித்துவிட்டோம்' என்ற திருப்தியை ஏற்படுத்துவதற்காக அல்ல, 'முழுமையாகப் படிக்க வேண்டும்' என்ற ஆவலைத் தூண்டுவதற்காகத்தான்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866