இனிய இல்லறம்

ஆசிரியர்: சீதாலக்ஷ்மி

Category இல்லற இன்பம்
Publication பாரதி பதிப்பகம்
FormatPaper back
Pages 88
Weight100 grams
₹27.00 ₹24.30    You Save ₹2
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பள்ளி அறைக் கட்டிலிலே அந்த இளைஞன் மாப்பிள்ளைக் கோலத்தில் இன்பக் கனவு கண்டு கொண்டு உட்கார்ந்திருக்கிறான்.
மல்லிகையின் மணமும், வாசனைத் திரவியங்களின் மணமும் வெறியூட்டுகின்றன. மெத்தென்ற பட்டு மெத்தையும், வெல்வெட்டுத் தலையணைகளும், அவனுடன் சேர்ந்து யாருடைய வரவுக்காகவோ காத்திருக்கின்றன. கட்டிலின் அருகிலுள்ள ஸ்டூலில், ஸ்டாண்டின் மீது நின்று எரிந்து கொண்டிருக்கும் ஊதுவத்தியின் புகை எதை எதையோ கற்பனை செய்தபடி சுழன்று சுழன்று மேல் நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. அதனருகில் பாலும், பழமும், பன்னீரும், சந்தன மும், வெற்றிலையும் பாக்கும் ஒரு நல்ல காட்சியை எதிர்பார்த்து ஏங்குகின்றன.
வெள்ளித்திரையில் வெற்றிவிழாக் கொண்டாடிய ஒரு படத்தின் முதலிரவுக் காட்சியில், பிரபல நட்சத்திரங்கள் மணமக்களாக வந்த காட்சியை, தான் இன்னும் சற்று நேரத்தில் உண்மையிலேயே அனுபவிக்கப் போவதை நினைத்துப் பூரிப்படைகிறான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சீதாலக்ஷ்மி :

இல்லற இன்பம் :

பாரதி பதிப்பகம் :