இன்னொரு வாசல், இன்னொரு வாழ்க்கை (பாகம்-3)

ஆசிரியர்: ஓஷோ

Category தத்துவம்
Publication கவிதா பதிப்பகம்
FormatPaperback
Pages 432
ISBN978-81-83450-66-0
Weight250 grams
₹150.00 ₹135.00    You Save ₹15
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereநீங்கள் எல்லாரும் என்னிடம் எப்படி செக்ஸ் ஆசைகளைக் கடந்து முன்னேறிச் செல்வது? என்று கேட்கிறீர்கள். ஆனால், யாரும் உணவின் மேல் எனக்குள்ள ஆசையை நான் எப்படி கடந்து செல்வது? என்று கேட்பதில்லையே? அது. ஏன்? யாரும், மூச்சு விடுவதன் மேல் எனக்குள்ள ஆசையை நான். எப்படி கடந்து செல்வது? என்று கேட்பதில்லையே? அது ஏன்? ஒஷோ இப்படி 'நச்' என்று மண்டையில் குட்டும் போது, பொறி கலங்கிப் போகிறது. அந்த மோதிரக்கைக் குட்டு, ஞானத்தின் வித்து. ஒரே சமயத்தில் மூன்று பெண்களைக் காதலிக்கிறேன். இது இறையருளா? இல்லை அதிர்ஷ்டமா? இல்லை துரதிர்ஷ்டமா ஒன்றும் புரியவில்லை என்று கேள்வி கேட்டு நிற்கும் - மனிதனுக்கு ஒஷோ சொல்லும் விளக்கம் நம்மைச் சிரிக்க வைக்கிறது, சிந்திக்க வைக்கிறது, சிலிர்க்கவும் வைக்கிறது.) நான் புத்தனுக்கு நடனமாடும் சக்தியைத் தருகிறேன். ஜோர் பாவுக்கு (புலனின்பம் துய்ப்பவன்) வானத்தை எல்லாம் தாண்டிப் பார்க்கும் உன்னிப்பான பார்வையைத் தருகிறேன். புத்தனாக மலர்ந்துவிட்ட ஜோர்பா தான் எனக்குப் பிரியமான கலகக்காரன்" என்று மனிதனின் புத்தகத்திற்கு ஒஷோ முத்தாய்ப்பு வைக்கும் போது, ஓர் ஆச்சாரியனின், ஒரு ஜீவன் முக்தனின் சந்நிதியில் நாம் அமர்ந்திருப்பதை நமது நாடி நரம்புகள் எல்லாம் உணர்கின்றன. மனிதனின் புத்தகம் உங்களின் புத்தகம். இந்த உலகின் புத்தகம். வருங்காலத்திற்கு நமக்கு மிஞ்சி நிற்கும் ஒரே நம்பிக்கை, எதற்காகவும், யாருக்காகவும் இதைத் தொலைத்து விடாதீர்கள்.- ஒஷோ.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஓஷோ :

தத்துவம் :

கவிதா பதிப்பகம் :