இன்று ஒரு நாள் வாழ்வோம்

ஆசிரியர்: ANONYMUS

Category ஆன்மிகம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
Format Paperback
Pages 288
Weight300 grams
₹125.00 ₹112.50    You Save ₹12
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஆல்-அனான் என்பது குடிநோயால் தாக்கப்பட்ட குடும்பத் தினருக்கு உதவும் ஒரு இயக்கம். ஆல்-அனான் வழிமுறை குடும்பங்கள் என்பது குடிநோயால் தாக்கப்பட்ட வரின் குடும்பத்தினரும், நண்பர்களும் ஆவர். இவர்கள் தங்கள் துன்பங்களையும் துயரங்களையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு, அத்துன்பங்களை எப்படிச் சமாளித்தார்கள் என்ற விவரங்களையும் பரிமாறிக் கொள்வார்கள். குடிநோய் என்பது ஒரு குடும்ப நோய். நம் எண்ணங்களில், நடைமுறைகளில் ஏற்படும் மாற்றங்களினால் இந்தத் துன்பங்களிலிருந்து விடுபட்டு வாழ வழியுண்டு.
ஆல்-அனான் என்பது எந்த மதத்தையோ, அரசியலையோ, இயக்கத்தையோ, நிறுவனங்களையோ சார்ந்ததல்ல. எந்த இயக்கக் கொள்கையையோ நிறுவனத்தையோ ஆதரிப்பதோ, எதிர்ப்பதோ அல்ல. ஆல்-அனான் இயக்கத்திற்கு உறுப்பினர் கட்டணம் கிடையாது. இந்த இயக்கம் கூட்டத்திற்கு வரும் உறுப்பினர்களின் சிறு நன்கொடையால் தான் நடைபெறுகிறது. இதில் உறுப்பினர் தங்களைத் தாங்களே பிறர் உதவியின்றி நடத்திக் கொள்ளும் இயக்கம்.
ஆல்-அனானின் குறிக்கோள் ஒன்றே ஒன்றுதான். நோயால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு உதவுவது தான். அக்குடும்பத்தினரை வரவேற்று, அன்பும், ஆறுதலும் கொடுத்து ஆல்-அனானின் பன்னிரண்டு வழிமுறைகளைக் கடைபிடித்து வாழ ஊக்கம் கொடுப்பதுதான். இப்படிப்பட்ட வழிமுறைகள் குடிநோய் நோயாளிகளுக்கு ஊக்கமும், நோயிலிருந்து விடுபட்டு வாழ நம்பிக்கையையும் அளிக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆன்மிகம் :

கௌரா பதிப்பக குழுமம் :