இன்றைய கல்வி எதிர்கொள்ளும் சவால்கள்

ஆசிரியர்: பிரதிபா

Category கல்வி
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 176
Weight200 grams
₹125.00 ₹117.50    You Save ₹7
(6% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஒரு தனி மனிதன் பெறுகிற கல்வி அவனது சமுதாயத்தை மாற்றக்கூடிய வலிமை பெற்றது. ஒரு சமுதாயம் பெறுகிற கல்வி அந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்படக்கூடியது. அத்தகைய கல்வியை ஒரு நாட்டில் உள்ள அத்தனை குடிமக்களும் பெறுவதற் கான வாய்ப்பு இருக்க வேண்டும். ஆனால், இன்றோ கல்வி என்பது வணிகப் பொருளாகிவிட்டது. முதலீடு செய்தால் நட்டம் ஏற்படாத வியாபாரமென்றால் கல்விதான் என்கிற நிலைமை இருக்கிற சூழலில், எல்லோருக்கும் கல்வி என்பதும் தரமான கல்வி என்பதும் கல்வியின் மூலம் முன்னேற்றம் என்பதும் வெறும் கானல் நீராகி விடாமல் இருக்க பாடுபட வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் இருக்கிறது. ஏனெனில், ஒவ்வொரு மனிதரும் ஒரு கட்டத்தில் பெற்றோர் என்ற தகுதியைப் பெறுகின்றனர். அதன் பொருட்டாவது, கல்வி மீது கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு வருகிறது. - தான் படித்தபோது இருந்த கல்வியின் தன்மை, இன்று தன் பிள்ளைகள் படிக்கும்போது உள்ள கல்வியின் நிலைமை இரண்டுக்குமான வேறுபாட்டை பெற்றோரால் உணர முடிகிறது. எத்தனை ஆண்டுகளானாலும் தங்களது பள்ளி வாழ்க்கையை யாரும் மறந்துவிட முடியாது. கவலையற்ற பருவம் என்று சொல்லப்படுவது பள்ளிப் பருவம். ஆனால், அந்தப் பருவத்திலும் கல்வியே சுமையாகி கவலைப்பட வேண்டிய சூழலை ஒவ்வொருவருக் குள்ளும் ஏற்படுத்தியிருக்கும். தங்களது அனுபவத்திலிருந்து பிள்ளைக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தர ஒவ்வொரு பெற்றோரும் விரும்புவதும் முயற்சிப்பதுமே நடைமுறை வாழ்க்கை. அந்த முயற்சிக்கு துணை நிற்கும் வழிகாட்டியாக இந்த நூல் பயன்படும் என்றால் அதுவே இதன் நோக்கத்தை நிறைவு செய்யும். மாணவர் முன்னேற்றத்தில் பாடப்புத்தகமல்லாத பல நூல்கள் பங்கு வகிக்கும். அதில் அரை சதவீத பங்கினையாவது இப்புத்தகம் ஆற்றும் என நம்புகிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பிரதிபா :

கல்வி :

கௌரா பதிப்பக குழுமம் :