இப்படியெல்லாமா இருக்கிறது பிரச்னை?

ஆசிரியர்: ப.திருமலை

Category உடல்நலம், மருத்துவம்
Publication புதிய வாழ்வியல் பதிப்பகம்
FormatPaper Back
Pages 80
Weight100 grams
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



தமிழகத்திலுள்ள மூத்த பத்திரிகையாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர், 35 வருட அனுபவம் கொண்ட இவர் தினமலர், தினமணி, குமுதம் ரிப்போர்ட்டர் ஆகிய இதழ்களில் முக்கிய பொறுப்பு வகித்தவர். தற்போது பல்வேறு இதழ்களில் சமூகம் சார்ந்த கட்டுரைகளை எழுதிவருகிறார். இவர் எழுதிய கட்டுரைகள் பல, நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. சில நூல்களுக்காக, விருதுகளும் பெற்றிருக்கிறார். பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இதழியல் தொடர்பான வகுப்புகளையும் நடத்தி வருகிறார். நேர்மையான அறநெறி நிறைந்த ஊடகவியலாளர்களை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட "மேம்பாட்டுக்கான இதழியல் என்ற அமைப்பின் தலைவராகவும் இருந்து வருகிறார். 4இந்தப் புத்தகத்தில், பொது விநியோகத்திட்டத்தில் நிலவும் குளறுபடி பெருகி வரும் விவாகரத்து காணாமல் போகும் பெண் குழந்தைகள் சுமங்கலித் திட்டத்தால் சுரண்டப்படும் சிறுமிகளின் அவலம் செல்போனால் ஏற்படும் ஆபத்து நாள்தோறும் துயரத்துக்குள்ளாகும் மீனவர்கள் கல்விக் கடனுக்காக அலைக்கழிக்கப்படும் மாணவர்கள்... என சமூகத்தை அன்றாடம் அரித்துக்கொண்டிருக்கும் பிரச்னைகளைப் பற்றி தகுந்த ஆதாரங்களோடும், புள்ளி விவரங்களோடும் நல்லதொரு நூலை உருவாக்கித் தந்திருக்கிறார். கட்டுரைகளுக்காக அவர் எடுத்த சிரத்தையும் மெனக்கெடல்களும் அதிகம். வாசித்தபின் நீங்களும் உணர்வீர்கள்.


உங்கள் கருத்துக்களை பகிர :
ப.திருமலை :

உடல்நலம், மருத்துவம் :

புதிய வாழ்வியல் பதிப்பகம் :