இயற்கை விவசாயத்திற்கு சில எளிய உத்திகள்

ஆசிரியர்: ஆர்.செல்வம் கோ.நம்மாழ்வார் குமரவேல்.மு

Category விவசாயம்
Publication நவீன வேளாண்மை
FormatPaperback
Pages 27
Weight50 grams
₹20.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereமுன்னுரை மனிதனின் நாகரிகம் தொடங்கிய காலம் முதல் இன்று வரை அவன் உடனிருந்து வரும் ஒரே தொழில் விவசாயம் தான். வளர்ந்தது நாகரிகம் மட்டும் தான் இன்று வரை பல பல முன்னேற்றங்கள் பல துறைகளில் இதனை செய்கின்றவர்களுக்கு பொருளாதாரத்தில் தன்னிறைவு இருப்பினும் காலம் காலமாய் கழனியில் காயும் உழவனின் நிலை மட்டும் எவ்வித மாற்றமும் இன்றி இன்னும் ஆரம்ப புள்ளியிலேயே இருக்கிறது. “மாற்றம்” இந்த வார்த்தை மட்டும் மாறாது என்று சொல்வார்கள் இந்த கூற்று எந்த அளவிற்கு உண்மையோ அந்த அளவிற்கு உண்மையானது உழுபவனின் நிலையும்.மண்வளம், மக்கள் வளம் குறைவாக கொண்டுள்ள நாடுகள் கூட பொருளாதாரத்தில் இன்று உயர்ந்து நிற்கின்றன. இதற்கு காரணம், இருக்கின்றதை திட்டமிட்டு சரியான முறையில் பயன்படுத்தி கொள்வதும், மக்களுக்கு தேவையானதை சரியான நேரத்தில் கிடைத்திட செய்யும் அரசுமாகும்.நம் நாட்டு விவசாயிகளுக்கோ இயற்கை முதல் நிலத்தில் விளையும் பயிர் வரை அனைத்தும் பிரச்சனைகளையே தரும். சரியான நேரத்தில் மழை இல்லாமல் போதல், எந்த பயிரை போட்டால் எதிர்பார்க்கும் வருமானம் கிடைக்கும் என்ற விபரத்தினை அறியாது இருத்தல் இக்காரணத்தாலேயே விவசாயம் இன்று அழிவை நோக்கிச் செல்கிறது. விவசாயத்தில் ஏற்படும் இத்தகைய பிரச்சனைகளை எதிர்கொண்டு செயல்படுபவர்கள் இன்றும் சாதித்து தான் வருகிறார்கள். இச்சாதனைகளை அனைவரும் எட்டவும், விவசாயிகளும் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடையவும் தற்போது பரவலாக பயிரிடப்பட்டு வரும் "வாசனை மரங்களின் அரசன்" சந்தன மரமாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கோ.நம்மாழ்வார் :

விவசாயம் :

நவீன வேளாண்மை :