இராவணர் மங்கையர் மருத்துவம்

ஆசிரியர்: மரு.கொ.பா.புட்பராசு மரு.பு.சாலின் மனோகர்

Category உடல்நலம், மருத்துவம்
Publication இராவணன் பதிப்பகம்
FormatHord bound
Pages 1156
Weight1.49 kgs
₹1450.00 ₹1377.50    You Save ₹72
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால், அதன் மொழியை முதலில் அழிக்க வேண்டுமென்பார்கள். அதன்படி தமிழ் மொழியை அழிக்க பல இனங்கள் பல்லாண்டு காலமாக முயன்று வருகின்றன. முதலில் ஆரிய மொழியான சமஸ்கிருதம் நமது மொழியோடு இணைந்து இனத்தோடு கலந்து காலங்காலமாக படையெடுப்பு நடத்தி வருகின்றன. அவர்களால் அழிக்க முடியாமல், பல மொழி பெயர்ப்புகள் செய்து நம்முடைய அறிவியலையும், மருத்துவ அறிவையும் தங்களது என்று சொல்லி வருகிறார்கள். பிற்காலத்தில் ஆங்கில மருத்துவம், நமது மருத்துவ முறைகளை பின்னோக்கி தள்ளிவிட்டது. தற்போது மைய அரசு ஆயுர் வேதத்தையே முன் நிறுத்தி செயல்படுகிறது. இராவணர் என்பவர், இதிகாசத்தில் மற்றும் வழக்கு முறையில் கொடுங்கோலன், தீமை செய்பவராகவே சித்தரிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தமிழ் இனத்தின் சிறந்த கல்வியாளராகவும், ஞானியாகவும், சிறந்த மருத்துவராகவும் இருந்ததை மறைத்து, அன்னாரைப்பற்றி இவ்வாறு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், தமிழின் மிக உயர்ந்த மருத்துவ முறையான இராவணர் மருத்துவத்தில், “இராவணன் சுகாதார களஞ்சியம்” மருத்துவ உலகிற்கே சவாலாக வெளிவந்தது. தமிழ் மருத்துவத்தில் மங்கையர் மருத்துவ நூல்களே இல்லையென்று சொல்லிக் கொள்ளும் வேளையில் மங்கையர் மருத்துவம் என்னும் இந்நூல் தமிழ் மருத்துவ உலகில் ஒரு புதிய எழுச்சியை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை . இந்நூல் சூலுறும் காலந்தொடங்கி மாதவிடாய் நிற்கும் காலம் வரையாக மங்கையர் உடற்கூறுகள் சம்மந்தமான மாற்றங்கள், வரும் நோய்கள் காரணிகள், அதற்கான தீர்வு மற்றும் தெளிவான உரை கொண்டிருப்பது மிக சிறப்பானதாகும்.

மரு. கொ. பா. புட்பராசு அவர்கள் வடிவமைத்த மங்கையர் மருத்துவம் என்னும் நூல் மிகச் சிறப்பான முறைகளை கொண்டுள்ளது. மகளிர் நோய்களைப் பற்றிய விளக்கங்களை மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார் ஆசிரியர் அவர்கள். மகளிர் மருத்துவத்தில் சமூகத்தில் கேள்விக்குறியாக உள்ள பல அநேக நோய்களுக்கு தீர்வு காணும் வகையில் அரிய மருந்துகளைக் கொடுத்துள்ளார். சித்த மருத்துவம் பயில்வோர் பயன்படுத்தும் வகையில் கல்வித் துறையில் இந்நூலை கொடுக்குமாறு மருத்துவர் அவர்களை நான் கேட்டுக் கொள்கிறேன். மறைந்துள்ள இன்னும் பல அரிய மருத்துவ முறைகளை சமுதாயத்திற்கு அள்ளித் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். அன்னார் அவர்களின் பணி சிறக்க என் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!

என் பெருமதிப்பிற்குரிய தமிழ் மருத்துவ ஆசான் திரு. கொ.பா. புட்பராசு அவர்கள் எழுதியுள்ள "இராவணர் மங்கையர் மருத்துவம்" நூலுக்கு அணிந்துரை அளிப்பதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். நான் ஓர் ஆங்கில மருத்துவர், அதிலும் சிறுநீரக மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் மாற்றுச் சிறு நீரக நிபுணராக பணியாற்றி வருகிறேன்.ஆங்கில மருத்துவ முறைதான் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட மருத்துவமுறை என்ற செருக்கு எனக்கும் உண்டு. ஆனால் வெறும் நூறு ஆண்டுகளுக்கு முந்தைய எங்கள் மருத்துவ முறைக்கு முன்னர், எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மருத்துவ முறைகள் நம் தமிழ்நாட்டில் இருந்தது என்பது பிரமிப்பான உண்மை .தமிழின் தொன்மையை யாரும் கணக்கிட முடியாது “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ்” என்பது தான் உண்மை . அதாவது உலகம் முழுவதும் தண்ணீராலும் மலைகளாலும் மட்டுமே சூழப்பட்ட காலத்தில் உயிரினங்கள் உலகில் முதன் முதலாகத் தோன்றிய காலத்தில் உதித்த மொழி தமிழ். உலகின் முதல் மனிதன் தமிழன், அவன் பேசிய முதன்மொழி தமிழ், முதல் நாகரீகம் என்ற உண்மைகள் எவ்வளவு சாமர்த்தியமாக இதுவரை மறைக்கப்பட்டிருக்கின்றன என்பதை இப்போதுதான் உணரத் தொடங்கியிருக்கிறோம். அதனால்தான், ஆதிச்சநல்லூர், கீழடி போன்ற இடங்களில் தோண்டத் தோண்ட பூதாகரமாக வெளிவரும் சரித்திர உண்மைகள் மறுபடியும் மண்ணுக்குள் புதைக்க தற்போதைய அரசினர் அவசரம் காட்டுகின்றனர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
உடல்நலம், மருத்துவம் :

இராவணன் பதிப்பகம் :