இறப்பின் இரகசிய புண்ணியச் சக்கரம்

ஆசிரியர்: P.D.ஜெகதீஸ்வரன்

Category ஆன்மிகம்
Publication அப்ஸரா பப்ளிகேசன்ஸ்
FormatPaper Back
Pages 288
Weight250 grams
₹250.00 ₹225.00    You Save ₹25
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஒரு மனிதன் ஜெனன நேரத்தை வைத்து அவன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை ஜாதகம் மூலம் தெரிந்து கொள்கிறோம். அதேபோல் ஒரு மனிதன் மரண நேரத்தை வைத்து மரணத்தின் பின் அவனது ஆத்மா அடைகிற நிலையை கணிக்கப் பயன்படுவதுவே புண்ணியச் சக்கரம் எனும் ஜோதிட சூட்சுமக் கலையாகும். ஜோதிட ரீதியில் மரண நேரத்தை கணித்த உடனேயே அந்த ஆத்மா நல்ல நிலையில் உள்ளதா அல்லது தீய நிலையில் உள்ளதா என கண்டறிய முடியும். பிறந்த குழந்தைக்கு ஜாதகம் கணிப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் இறக்கும் ஆன்மாவுக்கும் புண்ணியச் சக்கரம் கணித்து ஆன்மாவின் சூட்சும நிலைகளை அறிந்து, அதற்கு ஏற்ப பாவ புண்ணியங்களை உணர்ந்து வாழும் ஆத்மாக்களுக்கு வளமான வாழ்க்கைக்கு வழி வகுக்க வேண்டும். பாவம் செய்து பரலோகம் போனாலும், நரலோகம் போனாலும் புண்ணியத்தைக் கொடுத்து புனர்ஜென்மம் எடுக்க வைக்க பூர்வ புண்ணிய சக்கரம் வழி வகுத்திடும். இதுவே சூட்சுமத்தை உணர்த்திடும் ஜோதிட சூத்திரம். இது போன்ற பல சூட்சுமங்களை உள்ளடக்கியது இந்நூல்.

இந்நூலில், திருமுருக கிருபானந்த வாரியார், இரமண மகரிஷி, சத்ய சாய்பாபா, வேதாத்ரி மகரிஷி, யோகிராம் சூரத்குமார், வள்ளிமலை சுவாமிகள், விவேகானந்தர், அரவிந்தர், காஞ்சிப் பெரியவர், ஸ்ரீல பிரபுபாதா, ஸ்ரீசிவானந்த சரஸ்வதி, குன்றக்குடி அடிகளார், சாந்தானந்த சுவாமிகள் போன்ற மகான்களின் புண்ணிய சக்கரங்களுடன் அரிய செய்திகளோடு ஆணித்தரமான தீர்வுகளும் இந்நூலில் இடம் பெற்று இருப்பது திறமையான ஜோதிடத் தீர்வுகளுக்கு அச்சாரம் அளித்திடும் முத்தாரம். இந்நூலை வைத்திருப்பது மிகவும் அவசியம். எங்கு இறப்பு நடந்தாலும் அதற்கு வழிகாட்டும் வழிகாட்டியாக இந்த புத்தகம் திகழும் என்றால் அது மிகையல்ல. பீஷ்மர் கூட குறிப்பிட்ட நாள் வரை காத்திருந்து புண்ணிய உலகம் புகுந்ததை புண்ணியச் சக்கரத்தின் மையப்புள்ளியாக வைத்து அதையே அட்டைப்படமாக தாங்கியுள்ளது இந்நூல். இந்நூலைப் பயன்படுத்தி தங்களைச் சேர்ந்தவர்கள் புண்ணிய நிலையை அடைய இந்நூல் வழி வகுக்கும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
P.D.ஜெகதீஸ்வரன் :

ஆன்மிகம் :

அப்ஸரா பப்ளிகேசன்ஸ் :